விவரிக்க முடியாத பாதிப்புப் பற்றி 11,000 விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பருவநிலை மாற்றம்:

உலகம் பருவநிலை மாற்ற அவசர நிலை ஒன்றை எதிர்கொண்டிருப்பதாக 11,000க்கும் அதிகமான விஞ்ஞானிகளை அடங்கி குழு ஒன்று அறிவித்துள்ளது.

40 ஆண்டுகளின் தரவுகளை பயன்படுத்தி இது தொடர்பிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதோடு இந்த பிரச்சினையை கையாள்வதில் அரசுகள் தோல்வி அடைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதியாக மற்றும் ஆழமான மாற்றம் ஒன்று இல்லாத பட்சத்தில் மனிதகுலம் விவரிக்க முடியாத வகையில் பாதிப்புக்கு முகம்கொடுக்கு என்று அந்த ஆய்வு எச்சரித்துள்ளது.

இந்த அச்சுறுத்தல் பற்றி எச்சரிக்கும் தார்மீகப் பொறுப்பு தமக்கு இருப்பதாக அந்த ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சுமார் 153 நாடுகளைச் சேர்ந்த 11,000 விஞ்ஞானிகளைக் கொண்ட குழுவால் குழுவால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 40 ஆண்டுகள் காலநிலை எப்படி மாறி உள்ளதென ஆய்வு செய்துள்ள இந்த விஞ்ஞானிகள், மனிதன் மற்றும் மிருகங்களின் பெருக்கம், புதை படிவ எரிபொருள் நுகர்வு ஆகியவற்றைக் கணக்கிலெடுத்துள்ளார்கள்.

கடந்த மாதம் இதுவரையிலான மிக வெப்பமான மாதம் என்று செயற்கைக் கோள் தரவுகள் தெரிவிப்பதாகக் கண்டறியப்பட்டது. மனிதர்களின் நடவடிக்கைகள் அச்சுறுத்தும் வகையிலான இயற்கை மாற்றங்களுக்கு வழி வகுப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் விளைவாக, நிலத்திலும் கடலிலும் வெப்பத்தின் அளவு அதிகரிக்கிறது என்றும், கடல் மட்டம் உயர்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

எரிசக்தியின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வது, மாசுகளைக் கட்டுப்படுத்துவது, நிலங்கள் அகற்றும் பணிகளைக் கைவிடுவது ஆகியவற்றின் மூலம் பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று அவர்கள் அறிவுறுத்தினர்.

இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் தோமஸ் நியூசம், “நாம் கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்துக் கொள்ளவில்லை என்றால், நம் நுகர்வுக்காகக் கால்நடை வளர்ப்பதைக் குறைத்துக் கொள்ளவில்லை என்றால், எரிபொருள் தேவைக்காக நிலங்களை அழிப்பதை நிறுத்தவில்லை என்றால், இப்போது நாம் எதிர்கொண்டிருப்பதைவிட நிலைமை மோசமாகும்” என்று அவர் கூறி உள்ளார்.

இந்த பூமியின் சில பகுதிகள் மக்கள் வாழத் தகுதியற்றதாக மாறிவிடும் என்று அவர் எச்சரித்தார்.

Thu, 11/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை