தமிழ் தேசிய கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவிடம் 10 கோரிக்ைககள் முன்வைப்பு

புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை சந்தித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் முக்கியமான 10 கோரிக்ைககளை கையளித்துள்ளனர். மட்டக்களப்பு கல்லடியில் நேற்று முன்தினம் இந்தச்சந்திப்பு இடம்பெற்றது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன்வைத்துள்ள கோரிக்ைககள் வருமாறு :-–

 தேசிய பிரச்சினைக்குரிய நிரந்தரமான தீர்வு

 கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தினை முழுமையாக்குதல்

 தொழிற்சாலை அமைத்தல்

 பாலங்களை அமைத்தல்

 வேலையில்லா பட்டதாரிகளுக்கு விரைவாகத் தொழில்வாய்ப்புகளை வழங்குதல். இதன்போது உள்வாரிப் பட்டதாரி, வெளிவாரிப் பட்டதாரி, வெளிநாட்டுப் பட்டதாரி, எச்.என்.டி.ஏ பட்டதாரி என்ற பேதங்கள் பார்க்காமல் தொழில் வழங்குதல்.

 கிரான்புல் அணைக்கட்டினை நிருமாணித்தல்.

 அரச ஊடகத்துறையில் தமிழர்களுக்கான வாய்ப்புகள், பதவியுயர்வுகளின் போது பாரபட்சம் காட்டாமையை உறுதிப்படுத்தல்

 வீதிகளை புனரமைத்தல்

 விவசாயத்துறை, நீர்ப்பாசனத்துறை என்பவற்றை மேம்படுத்தல்

 மேய்ச்சல் தரைகளைப் பிரகடனப்படுத்தல்

போன்ற விடயங்கள் கோரப்பட்டிருந்தன.

இவ் விடயங்களைச் சாதகமாக கையாளவுள்ளதாக அமைச்சரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

தனது வெற்றியின் பின்னர் ஆக்கபூர்வமான பல நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

பாரபட்சம், பக்கச்சார்பு இல்லாமல் சகல மக்களுக்கும் சம வாய்ப்புகள் சமத்துவங்களை வழங்க வேண்டும் என்பதை ஜனாதிபதி வேட்பாளர் ஏற்றுக்கொண்டார்.

மணல்சேனை நிருபர்

Mon, 11/11/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக