தென்கிழக்கு பல்கலையின் 09ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு

இலங்கை, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 09ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களிலிருந்து கலந்து கொண்ட ஆய்வாளர்களின் பங்குபற்றுதலுடன் ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக அறபு மற்றும் இஸ்லாமிய பீட கேட்போர் கூடத்தில் (27) ஆரம்பமானது.

'பல்துறைசார் கல்வியல் ஆய்வினையும் புத்தாக்கத் திறனையும் மேம்படுத்தல்' எனும் தொனிப்பொருளில் சர்வதேச ஆய்வரங்கு மாநாட்டின் இணைப்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம்.எம்.நவாஸ் மற்றும் ஆய்வு மாநாட்டின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எம்.பாஸில் உள்ளிட்ட குழுவினரின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் தலைமையில் நடைபெற்ற இவ்வாய்வு மாநாட்டில் மலேசியா நாட்டின் மலாயா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எட்மன்ட் றிரன்ஸ் கொம்ஸ் பிரதம பேச்சாளராக கலந்து சிறப்பித்தார்.

இம்மாநாட்டில் பல்கலைக்கழக பதிவாளர், பல்கலைக்கழக பிரிவுத் தலைவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சர்வதேச ஆய்வரங்கு மாநாட்டில் பொருளாதாரம், அரசியல், தொழில் நுட்பம், கலை, கலாசாரங்கள், சூழல் பாதுகாப்பு, சனத்தொகை பரம்பல் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இந்தியா, மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட 53 வெளிநாட்டு ஆய்வாளர்களும், பல உள்நாட்டு ஆய்வாளர்களும் கலந்து கொண்டு தமது ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தனர்.

அம்பாறை சுழற்சி நிருபர்

Sat, 11/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை