கிழக்கு மாகாணமட்ட கராத்தே சுற்றுப் போட்டி: அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவர்கள் 03 தங்கம், 01 வெண்கலம்

இலங்கை கராத்தே சம்மேளனம் நடாத்திய கிழக்கு மாகாணமட்ட கராத்தே சுற்றுப்போட்டியில், அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவர்கள் வெற்றியீட்டி,பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் எம்.ஏ.அன்ஸார் தெரிவித்தார்.பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை)யில் இருநாட்கள் நடைபெற்ற கிழக்கு மாகாணமட்ட கராத்தே சுற்றுப் போட்டியில் பங்குபற்றிய இப்பாடசாலையின் தரம் -06 மாணவி எம்.எம்.ஜே.பாத்திமா நப்றியா 'காட்டா' மற்றும் 'குமிட்டி' போட்டிகளில் பங்குபற்றி முதலாமிடம் பெற்று, இரு

தங்கப் பதக்கம், சான்றிதழ் பெற்றுக் கொண்டார்.

அதேபோன்று, 'காட்டா' மற்றும் 'குமிட்டி' போட்டிகளில் பங்குபற்றிய

இப்பாடசாலை தரம் -07 மாணவன் எம்.எம்.ஜே.நப்றி அஹமட் தங்கம் மற்றும்வெண்கலப் பதக்கம், சான்றிதழ் பெற்றுள்ளார்.

மாகாணமட்டப் போட்டியில் வெற்றியீட்டி, தேசியமட்டப் போட்டிகளில் பங்குபற்றவுள்ள இம்மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையில் நடைபெற்றது. இதன்போது மாணவர்கள் கிண்ணம் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

வெற்றி மாணவர்கள் ஆசிரியர் எம்.சி.எம்.எம். ஜிப்ரி – ஏ.எல்.எஸ்.நிஹாறா தம்பதியினரின் பிள்ளைகளாவர். அத்துடன், ராம் கராத்தே சங்கத்தின் உறுப்பினர்களும், பிரதான பயிற்றுவிப்பாளர் சிஹான் கே.கேந்திரமூர்த்தியின் மாணவர்களுமாவர்.

(அட்டாளைச்சேனை மத்திய நிருபர்)

Wed, 11/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை