ஜனாதிபதி தேர்தலில் ஹிஸ்புல்லா களமிறங்கியது தற்கொலைக்கு சமம்

இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம்

ஜனாதிபதி தேர்தலில் ஹிஸ்புல்லா களமிறங்கியிருப்பது தற்கொலைக்கு சமனானது என சுகாதார சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்தார்.

சுயதொழில் கைத்தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு Global fashion industries வருடார்ந்த பயிற்சி நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் (19) இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக சுகாதார சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம், கௌரவ அதிதிகளாக நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.றியாஸ் ஆதம் , கல்முனை பிராந்திய காணி பதிவு ஆணையாளர் எம்.ஏ.ஜமால் முகம்மட் , இலங்கை இறைவரி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் எம்.எம் முசம்மில் ,பயிற்சி நெறியை பூர்த்தி செய்த மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர் .

இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் உரையாற்றுகையில்,

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்கள் இருவர்தான். அதில் சஜித் பிரேமதாச மற்றது கோட்டாபய ராஜபக்ஷ்ச இவ் இருவரையும் தவிர எனது நண்பர் முன்னாள் கிழக்கு மாகாண சபை ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கி இருப்பது, அவருடைய பல்கலைக்கழகம் சம்பந்தமான பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியுமென்ற யோசனையாக கூட இருக்கலாம்.

இது ஒரு தற்கொலை வேலைத்திட்டம் என்றுதான் நான் கருதுகிறேன். நானறிந்தவரை கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் ஏஜென்டாக தான் ஹிஸ்புல்லா வேலை செய்கிறார் என்பதை நான் கூறிக்கொள்கிறேன். சஜித் ஆதரிக்கும் நீங்கள் முஸ்லிம்கள் நலன் சார்ந்து எழுத்துமூல உத்தரவாதத்தை பெற்றிருக்கிறீர்களா என்ற கேள்விக்கு,

முஸ்லிம்கள் மட்டுமல்ல சிறுபான்மை மக்களின் நலன் சார்ந்து பல கோரிக்கைகளை கடந்த கால ஆட்சியாளர்களுடன் செய்திருக்கின்றோம். ஆனால் அவற்றில் பலவற்றில் வெற்றி கொண்டிருக்கின்றோம் சில நடைபெறாமல் போயிருக்கின்றன.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களுடனான சந்திப்பின் போதும் அவர் கூறும் வார்த்தைகளில் நம்பிக்கை ஏற்பட்டு இருக்கின்றது இந்த நம்பிக்கையின் அடிப்படையில் நாங்கள் செயற் படுகின்றோம்.

இதன்போது கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சாய்ந்தமருது பிரச்சினைகள், காணிப்பிரச்சினை போன்ற விடயங்களை இழுத்தடிப்பு செய்யாமல் குறிப்பிட்ட சில காலங்களுக்கு முடித்து தருவதாக சஜித் உத்தரவாதம் வழங்கியிருக்கிறார் என தெரிவித்தார்.

(கல்முனை மத்திய தினகரன் நிருபர்)

Mon, 10/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை