பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்துவதன் மூலம் எதிர்கால சந்ததியினரை பாதுகாக்கலாம்

பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்துவதன் மூலம் எதிர்கால சந்ததியினரை பாதுகாக்கலாம் என அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம்.ஜவாஹிர் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையினரால் பொதுமக்களுக்கு பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்ட வீடியோ காணொளியை வெளியிட்டு வைக்கும் நிகழ்வு கடந்த புதன்கிழமை வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 1935 ஆம் ஆண்டு எமது நாட்டில் பிளாஸரிக் மற்றும் பொலித்தீன் பாவனை ஆரம்பிக்கப்பட்டது.

இதனால் தீராத நோய், அங்கக் குறைபாடுள்ள பிள்ளைகள் பிறத்தல் போன்ற பல்வேறு பாதிப்புக்களுக்கு மக்கள் உள்ளாகி வருகின்றனர்.

அண்மையில் நான் சென்னைக்கு சென்ற போது பொலித்தீன் பிளாஸ்ரிக் பாவனை 95 சதவீதம் குறைந்தள்ளது. எமது நாட்டை பொறுத்தவரை அது குறையவில்லை. அரசாங்கம் இதனை கட்டுப்படுத்தலாம்.

அரசியல்வாதிகள் இதனை அரசியலுக்காக பொருட்படுத்தாமல் உள்ளனர்.

பொலித்தீன் பிளாஸ்ரிக் பாவிப்பதற்கு பதிலாக வேறு ஒன்றை யாராவது ஒருவர் கண்டுபிடிப்பாராயின் அதுவே இன்று தேவையாக உள்ளது என தெரிவித்தார்.

வீடியோ காணொளி வெளியீட்டு வைக்கப்பட்டதுடன் அதற்காக உழைத்த அனைவரும் பாராட்டி கொளரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பொது வைத்திய நிபுணர் டொக்டர் பி.கே.ரவீந்திரன், சிறுபிள்ளை வைத்திய நிபுணர் துஸித்த பி ஜயசிங்க, டொக்டர் ஜே.நௌபல், வைத்தியசாலை வைத்தியர்கள் தாதி உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதர உதவியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

அக்கரைப்பற்று மேற்கு தினகரன் நிருபர்

Tue, 10/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை