ஆர்ஜன்டீன ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி

ஆர்ஜன்டீன ஜனாதிபதி தேர்தலில் மைய இடதுசாரி எதிர்க்கட்சி வேட்பாளர் அல்பர்டோ பெர்னாண்டஸ் வெற்றிபெற்றுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி மொரிசியோ மக்ரிக்கிற்கு எதிராக வெற்றி பெறத் தேவையான 45 வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெர்னாண்டஸ் பெற்றுள்ளார்.

பெர்னாண்டஸ் தேர்தல் தலைமையகத்தில் கூடிய ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ஜன்டீனாவில் மூன்றில் ஒரு பங்கினரை வறுமையில் வாட்டியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலேயே ஆர்ஜன்டீனாவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.

இந்த பொருளாதார நிலை தேர்தலில் பெரும் தாக்கம் செலுத்தும் காரணியாக அமைந்தது.

கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆரம்பக் கட்ட தேர்தலில் பின்தங்கிய மக்ரி தேர்தலுக்கு முந்திய கருத்துக் கணிப்புகளிலும் பின்தங்கியே இருந்தார். இந்நிலையில் தோவியை ஏற்றுக்கொண்ட மக்ரி, தனது போட்டியாளருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அல்பர்டோ பெர்னாண்டஸ் வரும் டிசம்பர் 10 ஆம் திகதி ஜனாதிபதி பதவியை ஏற்கவுள்ளார்.

ஆல்பர்ட்டோ பெர்னாண்டஸ் தேர்தலில் வெல்ல அவருடன் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட கிறிஸ்டினா பெர்னாண்டஸ் தே கீயர்ச்சனர் ஒரு முக்கிய காரணமாவார்.

2007 முதல் 2015 வரை ஜனாதிபதி பதவியில் இருந்த இவர் தமது சமூக நலத் திட்டங்கள் மூலம் ஏழைகளை ஆதரித்தவர்.

அவர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவில்லை என்றாலும், அவருக்காகவே எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு வாக்களிப்பதாக பலரும் தெரிவித்தனர்.

Tue, 10/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை