யாழ்ப்பாணம் சர்வதேச விமான சேவை சர்வதேச வான்பரப்பில் ஈடுபட அங்கீகாரம்

பலாலி விமான நிலையம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து சர்வதேச வான் பரப்பில் விமானங்கள் பயணிப்பதற்கான அங்கீகாரத்தை சர்வதேச சிவில் விமான சேவைகள் அமைப்பு (ICAO) வழங்கியுள்ளது.

விமானப்படையின் கண்காணிப்பின் கீழ் செயற்பட்டு வந்த பலாலி விமான நிலையம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாகத் தரமுயர்த்தப்பட்டு கடந்தவாரம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையிலேயே தற்போது இவ் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளதால்

சேவையில் ஈடுபடுவதற்கான வான்பரப்பு அனுமதிப்பத்திரங்களும் யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த வான்பரப்புக்கான அனுமதிப்பத்திரம் சிவில் விமான சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சீ.நிமலசிறிபால, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் விமான நிலை இயக்க நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவன தலைவர் தம்மிக்க ரணதுங்க ஆகியோரிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து சர்வதேச விமான நிலைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இலங்கை விமான சேவைகள் அதிகார சபை சர்வதேச தரத்தை செயற்படுத்தும் காண்காணிப்பில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Wed, 10/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை