ரயில்வே வேலைநிறுத்தம் முடிவு

நேற்றும் சேவைகள் பாதிப்பு

ரயில்வே தொழிற்சங்க ஊழியர்களின் வேலைநிறுத்தம் 12ஆவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இதனால் நேற்றைய தினமும் அலுவலக பயணிகள் பாரிய அசெளகரியங்களை எதிர்கொண்டனர்.

வழமையாக சுமார் 200 இற்கும் அதிகமான ரயில்கள் பயணிக்கும் நிலையில் நேற்று 30 ரயில்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. இதனால் தூர இடங்களுக்குப் பயணிக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள்

தொடர்ந்தும் சிரமங்களை சந்திக்க நேரிட்டது.

இந்நிலையில் ரயில்வே தொழிற்சங்க ஊழியர்கள் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுநடத்தியிருந்தனர்.

இதற்கிடையில் ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் செய்திருப்பதனால் நேற்று நள்ளிரவு 12 மணிக்கிடையில் அனைத்து ஊழியர்களையும் கடமைக்கு திரும்புமாறு ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் திலந்த பிரணாந்து ஊழியர்களுக்கு அறிவிப்பு விடுத்துள்ளார்.

இவற்றைத் தொடர்ந்து தமது வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக ரயில்வே தொழிற்சங்க ஊழியர்கள் நேற்று அறிவித்தனர்.

சுமார் 30 இராணுவ வீரர்களை இந்தியாவுக்கு அனுப்பி ரயில் வண்டிகளை செலுத்துவதற்கான பயிற்சிகளை வழங்கவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்க அறிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.

லக்ஷ்மி பரசுராமன்

Tue, 10/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை