சர்வதேச ஒலிம்பிக் சங்க தலைவருக்கு நினைவுச் சின்னம்

சர்வதேச ஒலிம்பிக் சங்கதின் 24 ஆவது வருடாந்த பொதுச் சபை கூட்டம் கடந்த வியாழக்கிழமை தோஹா கட்டாரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில்ட கலந்துகொள்ள கட்டார் சென்றிருந்த இலங்கை தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் மற்றும் பொதுச் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா ஆகியோர் அங்கு சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் தோமஸ் பெச்சை சந்தித்து பேசினார். அத்துடன் இலங்கையின் ஓவியர் தில்லை ஜோசப் வரைந்த பவளப்பாறைக்கு இன்னொரு வாய்ப்பு தாருங்கள் என்ற ஓவியத்தை அவர்கள் அவருக்கு பரிசளித்தனர்.

கடந்த ஜூன் 25 ஆம் திகதி பொல்ஹேனயில் இடம்பெற்ற சூழல் பேணல் திட்டத்தின் கீழ் ஓவியர் தில்லை ஜோசப் இந்த ஓவியத்தை வரைந்திருந்தார். இந்த நிகழ்வை இலங்கை தேசிய ஒலிம்பிக் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

அருகிவரும் பவளப் பாறைகளுக்கு உயிர் கொடுங்கள் என்ற அர்த்தத்துடன் கூடிய வகையில் பவளப் பாறைகளின் முக்கியத்தை உணர்த்தும் இந்த ஓவியத்தின் இறந்துபோய் வெள்ளை நிறத்தில் உள்ள பவளப்பாறைகளுக்கு மனிதக் கையொன்று நிறம் பூசும் வகையில் அமைந்துள்ளது.

இந்த ஓவியம் ஒலிம்பிக் அமைப்பை ஊக்குவிக்கும் செயற்பாடுகளில் மட்டுமே பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tue, 10/22/2019 - 06:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை