சவூதி படை மீதான ஹூத்தி தாக்குதல் வீடியோ வெளியீடு

சவூதி கூட்டுப்படையைச் சேர்ந்த சுமார் 500 வீரர்களை கொன்று குவித்துள்ளதாக கூறும் யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் தொடர்பிலான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சவூதி கூட்டுப் படையைச் சேர்ந்த அதிகமான போர் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்படுவது போலவும், ஏராளமான வீரர்கள் பிடிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்படுவது போன்ற காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன. தாக்குதலில் பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

தாக்குதல் நடந்தது உண்மை என நிரூபிக்கப்படும் பட்சத்தில் சுமார் 5 ஆண்டு கால போரில் ஹூத்தி கிளர்ச்சி படை நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இதுதான் எனவும் கூறப்படுகிறது. வீடியோ வெளியாகியுள்ளபோதும்,

இந்த தாக்குதல் உண்மைதானா என்பது குறித்து தங்களது தரப்பு பதிலை சவூதி கூட்டுப்படையினர் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tue, 10/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை