நீதிமன்றில் தன்னைத்தான் சுட்டுக்கொண்ட நீதிபதி

தாய்லந்தின் நீதி முறையை குறைகூறி உரை ஒன்றை நிகழ்த்திவிட்டு நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே நீதிபதி ஒருவர் தன்னைத்தானே சுட்டு கொண்டுள்ளார்.

கொலை குற்றச்சாட்டிலிருந்து ஐவரை விடுவித்த கனகோர்ன் பியன்சனா, தாய்லந்தில் சட்டம் நியாயமானதாக இருக்க வேண்டும் என்றார். பின்னர் துப்பாக்கி ஒன்றை எடுத்து தன் நெஞ்சில் சுட்டுக்கொண்டார்.

நீதிமன்றத்தில் தாம் பேசியதை பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்புச் செய்தார் பியன்சனா. ஆதாரம் இல்லாமல் ஒருவருக்குத் தண்டனை வழங்குவது சரியல்ல என்று அவர் கூறினார். பின்னர் பேஸ்புக் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர் குணமடைந்து வருவதாகக் கூறப்பட்டது. மன அழுத்தத்தால் பியன்சனா தம்மைச் சுட்டுகொண்டதாகச் சக ஊழியர்கள் சிலர் கூறிவருகின்றனர். தாய்லாந்தில் நீதிபதிகளால் நீதிமுறை விமர்சிக்கப்படுவது மிக அரிதான ஒன்றாக உள்ளது.

Mon, 10/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை