கொஹ்லிக்கு ஓய்வு அளிக்க திட்டம்

பங்களாதேஷுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் தலைவர் விராட் கொஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளது.

கிரிக்கெட் வீரர்களின் ஆட்டசுமை முகாமைத்துவத்தின் ஒரு பகுதியாக இந்திய கிரிக்கெட் சபை தொடர்ந்து ஆடி வரும் வீரர்களுக்கு அவ்வப்போது ஓய்வு அளித்து வருகிறது.

கடந்த 2018 ஒக்டோபார் முதல் மொத்தம் நடைபெற்ற 56 ஆட்டங்களில் 48 இல் பங்கேற்று ஆடியுள்ளார் கொஹ்லி. பங்களாதேஷ் தொடருக்கான இந்திய அணி வரும் 24ஆம் திகதி அறிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் கொஹ்லிக்கு ஓய்வு தரப்படும் என தேர்வுக் குழு வட்டாரங்கள் கூறியுள்ளன. தனது உடல்நிலை குறித்து கொஹ்லி மட்டுமே அறிவார். ஓய்வு தேவைப்பட்டால் அவரே தேர்வுக் குழுவிடம் தெரிவிக்கலாம்.

முதல் டி20 ஆட்டம் நவம்பர் 1ஆம் திகதி டெல்லியிலும், 7ஆம் திகதி இரண்டாவது டி20 ராஜ்கோட்டிலும், 10ஆம் திகதி மூன்றாவது டி20 நாக்பூரிலும் நடைபெறவுள்ளது.

எனினும் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் அணித்தலைவர் கொஹ்லி கட்டாயம் பங்கேற்பார் எனத் தெரிகிறது. உலக டெஸ்ட் சம்பியன் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெறும் இதில் முதல் ஆட்டம் நவம்பர் 14 இல் இந்தூரிலும், 22ஆம் திகதி கொல்கத்தாவிலும், நடைபெறுகின்றன.

அதைத் தொடார்ந்து டிசம்பார் மாதம் மே.இ.தீவுகளுடன் 3 டி20 மற்றும் ஒருநாள் ஆட்டங்கள் நடக்கின்றன.

Mon, 10/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை