இலங்கைத் தமிழர்கள் இழந்தவைகள் ஏராளம்

தமிழ் நாட்டு திரைப்பட இயக்குனர் பாரதிராஜா

இலங்கையில் தமிழர்கள் பூர்வீகக் குடிகள் அவர்கள் கடந்த மூன்று தசாப்த போராட்டத்தினால் இழந்தவைகள் ஏராளம். ஆனாலும் அவர்களுக்கு கைகொடுத்து நிற்பது கல்வியே என திரைப்பட இயக்குனர் பத்மஸ்ரீ பாரதிராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு அகிலா பவுண்டேசன் நிறுவனத்தால் பொறியியல்துறை, மருத்துவத்துறை என்பனவற்றில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை, ஊடகத்துறையில் நீண்டகாலம் பணியாற்றியவர்களையும் விளையாட்டுத்துறையில் முத்திரை பதித்தவர்களையும் பாராட்டும் நிகழ்வு நேற்று ( 7) நடந்தது.

இந் நிகழ்வில் பிரதம அதிதிகளில் ஒருவராக தமிழ்நாட்டு திரைப்பட துணை இயக்குனர் அமீரும் ,சிறப்பு அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜீ.ஸ்ரீநேசன், எஸ்.யோகேஸ்வரன் ஆகியோரோடு அழைப்பு அதிதிகளாக மட்டக்களப்பின் வலயக் கல்விப் பணிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், இலங்கையில் செம்மொழியாம் தழிழ்மொழி வாழ்கிறது. இந்த நிகழ்வு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தருகிறது என்றார்.

மருத்துவத் துறையில் 20 மாணவர்களும், பொறியில் துறையில் 30 மாணவர்களும், விளையாட்டுத்தறையில் 45 மாணவர்களும் க.பொ.த பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப்பெற்ற வவுணதீவு கல்குடா வலயங்களைச் சேர்ந்த மாணவர்களும் ஊடகவியலாளர்கள் 7 பேரும் கௌரவிக்கப்பட்டனர்.

 

புளியந்தீவு குறூப் நிருபர்

Tue, 10/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை