மாற்றம் வருமாக இருந்தால் பிரச்சினைகள் உடன் தீர்க்கப்படும்

ஆயுதப் பலத்தினூடாக பிரச்சினைகளை தீர்க்கலாமென ஒரு காலத்தில் நடத்தப்பட்ட ஆயுதப்போராட்டம் சரியாக முன்னெடுக்கப் படவில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மன்னார் சாவட்கட்டு கிராமத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) காலை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மக்கள் எதிர் நோக்கும் நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வு காண தற்போது வழி ஏற்பட்டுள்ளது.மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தல் வந்துள்ளதால்,வெற்றி பெறும் வேட்பாளருடன் இணைந்து வெற்றியை உங்களுடைய தாக்கிக் கொள்ளுங்கள்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் அரசியல் வாதிகள் அனைவரும் மக்களை உசுப்பேற்றி வாக்குகளை அபகரித்து தங்களடைய தேவைகளைப் பூர்ததி செய்து கொண்டனரே தவிர மக்களின் தேவைகள் பிரச்சினைகளைத்

தீர்க்கவில்லை. வாழ்வாதாரம், அரசியல் உரிமை,காணிப்பிரச்சினை, வீட்டுப் பிரச்சினைகள் எதுவாகயிருந்தாலும் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்த பாடில்லை.

எனவே, வரவுள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாம் வெற்றி பெற வேண்டும்.ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேலைத்திட்டம், கொள்கைத்திட்டம் எல்லாம் மக்கள் வெற்றி பெற வேண்டுமென்பதே.

மக்கள் வெற்றி பெற வேண்டுமானால் சரியான ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும். அதனூடாக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

-நாங்கள் ஒரு காலத்தில் பிரச்சினைகளுக்காக ஆயுதங்களைத் தூக்கினோம்.

ஆனால், அந்தப் போராட்டம் சரியாக முன்னெடுக்கப் படவில்லை. இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டது. சர்வதேச மாற்றங்கள் ஏற்பட்டன.இயக்கங்களுக் கிடையில் வெட்டுக் குத்துகள் ஏற்பட்டன.

அதனால், நாங்கள் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டோம்.ஆனால், அதை ஏற்றுக் கொண்ட தமிழ்த் தலைமைகளும் சரியாக அதனை நடத்தவில்லை. எனவே, வரவுள்ள சந்தர்ப்பத்தை ஈ.பி.டி.பி யைப் பின்பற்றி பயன் படுத்துங்கள் என்றார்.

 

மன்னார் குறூப் நிருபர்

Wed, 10/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை