டயலொக் கிண்ணங்கள் ஜப்பான் அணிகள் சம்பியன்

 கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற அணிக்கு எழுவர் ஆசிய றக்பியின் மூன்றாவதும் கடைசியுமான கட்டத்தில் ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் ஹொங்கொங்கை 17–12 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிகொண்டு ஜப்பான் சம்பியனானது.

மூன்றாம் கட்டப் போட்டிக்கு டயலொக் அனுசரணை வழங்கியது.டயலொக் குழுமத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி அமலி நாணயக்காரவிடமிருந்து டயலொக் சம்பியன் கிண்ணத்தை ஜப்பான் ஆண்கள் அணித் தலைவர் குரோஜி பெற்றுக்கொண்டார்.

இலங்கை றக்பி தலைவர் லசித் குணரட்னவிடமிருந்து டயலொக் சம்பியன் கிண்ணத்தை ஜப்பான் பெண்கள் அணித் தலைவி ஜொசே சேரு பெற்றுக்கொண்டார்.

பரிசளிப்பு வைபவத்தில் டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் குறியீடு மற்றும் ஊடக சிரேஷ்ட பொது முகாமையாளர் ஹர்ஷ சமரநாயக்க, ஆசிய றக்பி தலைவர் அகா ஹுசெய்ன், இலங்கை றக்பி செயலாளர் துசித்த பீரிஸ் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

அணிக்கு எழுவர் ஆசிய றக்பியின் மூன்று கட்டங்கள் நிறைவில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் ஜப்பான் அணிகள் ஒட்டுமொத்த சம்பியனாகின.பெண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் தாய்லாந்தை 26 – 5 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிகொண்டு ஜப்பான் சம்பியனானது .

Wed, 10/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை