எமது ஆட்சியில் சாய்ந்தமருதுக்கு நகர சபையை பெற்றுத் தருவேன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

எமது ஆட்சியில் சாய்ந்தமருதுக்கு நகர சபை அமைத்து தருவேன் -என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து சாய்ந்தமருதில் பொதுக் கூட்டமொன்று வெளிக்கிழமை (25) இடம்பெற்றது .

முன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சர் மையோன் முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார் .

அவர் மேலும் உரையாற்றுகையில்,

கடலில் காணப்படுகின்ற படகுகளை நிறுத்த மீன்பிடி துறைமுகம் அவசியம். அதற்கு நிச்சயமாக மீன்பிடி துறைமுகத்தை அமைத்து தருவேன் என உறுதியளிக்கிறேன். மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரனம் வழங்குவோம் என்பதை உறுதிபட கூறுகிறேன் .

கல்முனை நகரை அதி நவீன நகரமாக மாற்றுவேன் என இந்த இடத்தில் கூறிக்கொள்கிறேன் .

அடுத்த எமது ஆட்சியில் சாய்ந்தமருது நகர சபையை அமைத்து தருவேன் என உறுதிப்பட கூறுகிறேன் .

நான் வேண்டுகோள் விடுத்தால் அது உங்களுக்கு கிடைக்கும்.

2005ம் ஆண்டு நான் இப் பிரேதேசத்திற்கு வந்தே. அந்த நேரம் என்னிடம் கேட்டது நீங்கள் ஒன்று பயங்காரவாத பிடியிலிருந்து எங்களை மீட்டேடுத்துத் தாருங்கள் என்று அந்த நேரம் பள்ளிவாசல் செல்ல முடியாது, நூற்றுக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். வேறு இடங்களுக்கு செல்ல முடியாது அந்த நேரம் பாதுகாப்பை பலப்படுத்தியது கோட்டாபய ராஜபக்ஷவே, ஆனால் இந்த ஆட்சியில் தான் முஸ்லிம்கள் முதன் முறையாக வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு செல்ல முடியாத நிலையை ஏற்பட்டது. இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர் யார் ?

மேலும் குண்டுவெடிக்கும் என்று தெரிந்தும் நித்திரை செய்த இந்த அரசாங்கம் தான் இத்தாக்குதலுக்கு பொறுப்பு சொல்ல வேண்டும். இதனை மக்கள் இன்று அனுபவித்து கொண்டு உள்ளனர்.

ஒரு அமைச்சருடைய தந்தை தன்மகனை நாளை தேவாலயத்திற்கு செல்ல வேண்டாம் என்று சொல்கிறார். தேவாலயத்தில் குண்டுவெடிக்க போகின்றது என்று. அதனால் அந்த அமைச்சர் தேவாலயத்திற்கு செல்லவில்லை. தாக்குதலில் அப்பாவி 400 மக்கள் உயிரிழந்தார்கள். அந்த அமைச்சர் காப்பாற்றப்பட்டார். அந்த அமைச்சர் வேறு யாரும் அல்ல. சஜித் பிரேமதாசவின் ஊடக பேச்சாளர் ஆவார்.

பேருவளை சம்பவத்தின் போது ஜனாதிபதியான நானும் பாதுகாப்பு செயலாளரும் அன்றைய தினம் நாட்டில் இல்லாமல் இருந்தோம். இருந்த போதிலும் சம்பவம் அறிந்து உடனே நாடு திரும்பி இரவோடு இரவாக உணவு உண்ணாமல் நேரடியாக பேருவளைக்கு சென்றோம். அன்று பாதிக்கப்பட்ட மக்களுடன் பேசி அவர்களுக்கு வீடு கட்டி அவர்களுக்கு சமாதானத்தை ஏற்படுத்தினோம்.

இன்று என்ன நடந்தது. திகன, அம்பாறை சம்பவங்கள் இடம்பெற்றது. இதன் போது முஸ்லிம் மக்களுக்காக அரசியல் தலைவர்கள் எதுவும் பேசினார்களா அதைப்பற்றி பற்றி யாரும் பேசவில்லை ஜனநாயக உரிமையான உள்ளுராட்சி மன்ற உரிமையையும் இல்லாதொழித்து விட்டனர். அவர்கள் தங்கள் பைகளையே நிரப்புகின்றனரே ஒழிய உங்களுக்கு எதனையும் செய்யவில்லை.

நீங்கள் எங்களுடன் இருங்கள் உங்களுக்கு நாம் மிகவும் பலமுள்ள, பாதுகாப்பு தரக்கூடிய ஓர் தலைவரை முன்வைக்கிறோம் என்றார்.

மேலும் இதன் போது தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா, முன்னாள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற இராஜாங்க அமைச்சர் சிரியாணி விஜயவிக்ரம, மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில்,கட்சியின் முக்கியஸ்தர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Mon, 10/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை