கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பொறியியல் தொழிநுட்ப பிரிவு அணி வெற்றி

சிறுவர் தினத்தை முன்னிட்டு நிந்தவூர் அல்-–அஸ்ரக் தேசிய பாடசாலை உயர்தர மாணவர்களுக்கிடையிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பொறியியல் தொழிநுட்ப பிரிவு அணி வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

இச்சுற்றுப்போட்டி 10 ஒவர் மட்டுப்படுத்தப்பட்ட அணிக்கு 11வீரர்கள் கொண்டதாகும். இறுதி சுற்றுக்கு பொறியியல் தொழிநுட்ப பிரிவு அணியும், வர்த்தக பிரிவு அணியும் தெரிவானது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பொறியியல் தொழிநுட்ப பிரிவு அணி வர்த்தக பிரிவு அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய வர்த்தக பிரிவு அணி 10ஒவர் நிறைவில் 4விக்கட்களை இழந்து 97 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பொறியியல் தொழிநுட்ப பிரிவு அணி 8ஒவர் நிறைவில் 03 விக்கெட்களை இழந்து 105 ஒட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கிக்கொண்டது.

சுற்றுப்போட்டி அல்-–அஸ்ரக் தேசிய பாடசாலை அதிபர் ஏ.அப்துல் கபூர் தலைமையில் பாடசாலை மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வுக்கு சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வெற்றிக்கிண்ணத்தை வழங்கிவைத்தார். கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் ஏ.அப்துல் ஜலீல், கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவிக் கல்வி பணிப்பாளர் எம்.ஏ.எம்.றசீம், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எம்.ஐ.உமர்அலி, ஆசிரியர்கள், மாணவர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

(சவளக்கடை குறூப் நிருபர்)

Sat, 10/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை