விழிப்புலனற்றோருக்கு என்றும் பக்கத்துணையாக இருப்போம்!

சர்வதேச  வெள்ளைப்பிரம்பு  தினம் இன்று

வெள்ளைப் பிரம்புக்கான சட்டரீதியான அங்கீகாரம் முதன்முதலாக 1931ஆம் ஆண்டில் அமெரிக்காவின் இலினோய் மாவட்டத்திலுள்ள பியோரியா என்ற இடத்தில்தான் கிடைத்தது. இது அங்குள்ள லயன்ஸ் கழகத்தின் முயற்சியினாலேயே சாத்தியமானது.

இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் ஒவ்வொன்றாக வெள்ளைப் பிரம்பை அங்கீகரிக்கத் தொடங்கின.

வெள்ளைப் பிரம்பு விழிப்புலனற்றவர்களுக்கு பக்கத் துணையாக உதவுகிறது. அதன் தனித்துவத்தை சர்வதேசம் அறிந்து கொள்வதற்கும், விழிப்புலனற்றோர் மீது மக்களது கவனம் ஈர்க்கப்படும் வகையிலும் வருடத்தில் ஒருநாள் சர்வதேச ரீதியில் வெள்ளைப் பிரம்பு தினம் கொண்டாடப்படுகிறது.ஒக்டோபர் 15ஆம் திகதி அதற்கான தினம் ஆகும்.

1969ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அகில உலக பார்வையற்றோர் சம்மேளனத்தின் மாநாட்டில் ஒக்டோபர் 15ஆம் திகதியன்று இலங்கையிலும் சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தைக் கொண்டாடுவது என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இப்போது வெள்ளைப் பிரம்பு தினம் உலக நாடுகள் எங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

“வெள்ளைப் பிரம்போடு செல்பவருக்கு உங்களால் முடிந்த வரை உதவுங்கள் அல்லது அவர்கள் தடையின்றிச் செல்வதற்கு வழிவிட்டுக் கொடுங்கள். உங்கள் வாகனங்களை அவர்களுக்கு இடையூறின்றி நிதானமாகச் செலுத்துங்கள்" என்பதே இன்றைய தினம் உலகுக்கு தரும் செய்தி ஆகும்.இதன் மூலம் வெள்ளைப் பிரம்பின் முக்கியத்தும் மக்கள் மனதில் ஆழமாக உணர்த்தப்படுகிறது,

வெள்ளைப் பிரம்பை கையில் வைத்திருப்பவர்களுக்கு வீதியிலே நடந்து செல்லும் உரிமையும், வீதியை முதலில் கடக்கும் உரிமையும் உண்டு.எந்தவொரு பொதுப் போக்குவரத்து வாகனத்தையும் எவ்விடத்திலேனும் நிறுத்தவோ, சாத்தியமாகும் பட்சத்தில் அதில் ஏறிக் கொள்ளவோ முடியும்.

வெள்ளைப் பிரம்பை வைத்திருப்பவர், அதனை நான்காக மடித்து வீதியில் குறுக்கே காட்டினால் அவர் ஏதாவதொரு வாகனத்தை நிறுத்துவதற்கு முயல்கிறார் என்பதாகவும், இரண்டாக மடித்து வீதியின் குறுக்கே காட்டினால் வீதியைக் கடக்க முயல்கிறார் என்பதாகவும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

உயர்ந்த இலட்சியங்களோடும் உன்னத உறுதியோடும் வாழ்க்கைப் பாதையில் அடியெழுத்து வைக்கின்ற எவரும் தோல்வி காண்பதுமில்லை; துவண்டு போவதுமில்லை.பார்வைப் புலன் இழந்தோருக்கு வெள்ளைப் பிரம்பு தினத்தில் தரப்படுகின்ற செய்தி இதுதான்.

Tue, 10/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை