திருமலை - கோமரங்கடவலயில் புதிய பொலிஸ் நிலையம்

கிழக்கு ஆளுநரினால் திறந்துவைப்பு

திருகோணமலை -கோமரங்கடவல பகுதியில் 250 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொலிஸ் நிலையம் நேற்று (15) கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலாால் டி சில்வாவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

கோமரங்கடவல பொலிஸ் நிலையம் கடந்த யுத்த காலத்தின் போது விடுதலைப் புலிகளின் தாக்குதலினால் சேதமாக்கப்பட்டு மீண்டும் தனியார் காணியொன்றில் எவ்விதமான வசதிகளுமின்றி இயங்கி வந்தது.

இதனையடுத்து பிரதேச செயலகத்தினால் பொலிஸ் நிலையம் அமைப்பதற்கான காணி வழங்கப்பட்டதுடன், புதிதாக பொலிஸ் நிலையமொன்றினை அமைப்பதற்கு 250 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்டு நேற்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஆரியவதி கலப்பத்தி, கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க மற்றும் கோமரங்கடவல பிரதேச சபை தலைவர், உறுப்பினர்கள், பிரதேசத்தில் உள்ள அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

ரொட்டவெவ குறூப் நிருபர்

Wed, 10/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை