டிரம்ப் மீதான விசாரணை: இந்த வாரம் வாக்கெடுப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான விசாரணையின் முதல்கட்ட வாக்கெடுப்பை இந்த வாரத்தில் நடத்துவதற்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை திட்டமிட்டுள்ளது.

விசாரணையை தொடர்வதற்காக தெளிவான வழி மற்றும் வெளிப்படைத் தன்மையை இது ஏற்படுத்தும் என்று ஜனநாயகக் கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் முறையற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்ட வெள்ளை மாளிகை ஊடகப் பேச்சாளர் ஸ்டபனி கிறிஷாம், தீர்மானத்தின் முழுமையான ஆவணம் வெளிவரும் வரை கருத்துக் கூற மறுத்தார்.

டிரம்ப் தனது அரசியல் எதிராளிக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கு வெளிநாட்டு அரசாங்கம் ஒன்றுக்கு அழுத்தம் கொடுத்ததாக பிரதிநிதிகள் சபையில் விசாரணை மூலம் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவிருப்பதாக பிரதிநிதிகள் சபையின் சமாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்தார். பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சியினரே பெரும்பான்மையாக உள்ளனர்.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டாலும் டிரம்பின் குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையாக உள்ள செனடில்லி மூன்றில் இரண்டு வாக்குகளை வெல்ல வேண்டி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wed, 10/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை