வலய மட்ட சிறுவர் மெய்வல்லுநர் போட்டிகள்

அக்கரைப்பற்று கல்வி வலய ஆரம்பப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட வலய மட்ட சிறுவர் மெய்வல்லுநர் போட்டிகள் கடந்த சனிக்கிழமை(28) அட்டாளைச்சேனை அஷ்ரஃப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

அக்கரைப்பற்று கல்வி வலய விளையாட்டு விருத்தி இணைப்பாளர் ஏ.எல்.பாயிஸின் நெறிப்படுத்தலின்கீழ் ஆரம்பப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.அபுதாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முத்துபண்டா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு விளையாட்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் கீழுள்ள அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் கல்விக் கோட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 35 பாடசாலைகளிலிருந்து இம்முறை 81 குழுக்கள் இவ்விளையாட்டு போட்டிகளுக்காக கலந்து கொண்டன.

வலய மட்ட இறுதிப் போட்டிகளில் மாணவர்கள் காட்டிய திறமைகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெறுகின்ற குழுக்கள் மாகாண மட்டப் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுகின்றன. இதற்கமைவாக, அக்கரைப்பற்று கல்வி வவயத்திலிருந்து தெரிவு செய்யப்படும் 27 குழுக்கள் எதிர்வரும் ஒக்டோபர் 8, 9 ஆம் திகதிகளில் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள மாகாண மட்டப் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நடைபெற்ற வலய மட்ட விளையாட்டு விழாவின்போது, தரம்-03 ஆண்கள் பிரிவில் 39 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட அக்கரைப்பற்று சாஹிறா வித்தியாலம் முதலாமிடத்தினையும், 34 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட அக்கரைப்பற்று அஸ்–-ஸிறாஜ் ஜுனியர் கல்லூரி இரண்டாமிடத்தினையும், 33 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட அக்கரைப்பற்று ஜுனியர் கல்லூரி மூன்றாமிடத்தினையும் பெற்றுக் கொண்டன.

தரம் – -03 பெண்கள் பிரிவில் 37 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட அட்டாளைச்சேனை அல்-–முனீறா பெண்கள் உயர் பாடசாலை முதலாமிடத்தினையும், தலா 35 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட அட்டாளைச்சேனை நிலாமியா வித்தியாலயம், அக்கரைப்பற்று சாஹிறா வித்தியாலயம் ஆகியன இரண்டாம், மூன்றாமிடங்களைப் பெற்றுக் கொண்டன.

தரம்-03 ஆண் பெண் கலவன் அணிகளிடையே நடைபெற்ற போட்டிகளின்போது 20 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட அக்கரைப்பற்று சம்சுல் உலூம் வித்தியாலயம் முதலாமிடத்தினையும், 14 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட அட்டாளைச்சேனை அல்-முனீறா பெண்கள் உயர் பாடசாலை இரண்டாமிடத்தினையும், 09 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட அக்கரைப்பற்று அல்-ஹிதாயா வித்தியாலயம் மூன்றாமிடத்தினையும் பெற்றுக் கொண்டன.

தரம்-–04, ஆண்கள் பிரிவில் 39 புள்ளிகளைப் பெற்ற அக்கரைப்பற்று அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலை முதலாமிடத்தினையும், 37 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட அக்கரைப்பற்று சாஹிறா வித்தியாலயம் இரண்டாமிடத்தினையும், 32 புள்ளிகளைப் பெற்ற அட்டாளைச்சேனை அல்-–அர்ஹம் வித்தியாலயம் மூன்றாமிடத்தினையும் பெற்றுக் கொண்டன.

தரம்-–04, பெண்கள் பிரிவில் 35 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட அக்கரைப்பற்று சாஹிறா வித்தியாலயம் முதலாமிடத்தினையும், 34 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட அட்டாளைச்சேனை அல்-–முனீறா வித்தியாலயம் இரண்டாமிடத்தினையும், 31 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட ஒலுவில் ஜாயிஸா மகளிர் கல்லூரி மூன்றாமிடத்தினையும் பெற்றுக் கொண்டன.

தரம்-–04, ஆண் பெண் கலவன் போட்டியாளர்களிடையே நடைபெற்ற போட்டிகளின்போது 23 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட ஒலுவில் அல்-மதீனா வித்தியாலயம் முதலாமிடத்தினையும், 21 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட அக்கரைப்பற்று சேர் ராசீக் பரீத் வித்தியாலயம் இரண்டாமிடத்தினையும், 19 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட அக்கரைப்பற்று சம்சுல் உலூம் வித்தியாலயம் மூன்றாமிடத்தினையும் பெற்றுக் கொண்டன.

தரம்-05, ஆண்கள் பிரிவு போட்டிகளின்போது, 37 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட அக்கரைப்பற்று சாஹிறா வித்தியாயலம் முதலாமிடத்தினையும், 34 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட அக்கரைப்பற்று அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலை இரண்டாமிடத்தினையும், 29 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட அட்டாளைச்சேனை நிலாமியா வித்தியாலயம் மூன்றாமிடத்தினையும் பெற்றுக் கொண்டன.

தரம்-–05, பெண்கள் பிரிவில், 37 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட அட்டாளைச்சேனை ஸஹ்றா வித்தியாலயம் முதலாமிடத்தினையும், 34 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட ஒலுவில் ஜாயிஸா மகளிர் கல்லூரி இரண்டாமிடத்தினையும், 33 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட அட்டாளைச்சேனை அல்-முனீறா பெண்கள் உயர் பாடசாலை மூன்றாமிடத்தினையும் பெற்றுக் கொண்டன.

தரம்-–05, ஆண் பெண் கலவன் போட்டியாளர்களிடையே நடைபெற்ற போட்டிகளின்போது, 25 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட ஒலுவில் அல்-மதீனா வித்தியாலயம் முதலாமிடத்தினையும், தலா 16 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட ஒலுவில் மினாறா வித்தியாலயம் மற்றும் அக்கரைப்பற்று சம்சுல் உலூம் வித்தியாலயம் ஆகியன முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்றுக் கொண்டன.

(அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்)

Thu, 10/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை