நல்லாட்சி அரசை மீண்டும் உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

நல்லாட்சி அரசாங்கத்தை மீண்டும் ஸ்தாபிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.

திருகோணமலை இறக்கக்கண்டி பகுதியில் நேற்றுமுன்தினம் (06) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்துதெரிவிக்ைகயில்,

ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூகத்தை பாதிக்காத வகையில் நல்லதொரு நிலையில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. தங்களது மதக் கடமைகளை நிறைவேற்றவும் இரவு நேரங்களில் சுதந்திரமாக தலைநிமிர்ந்து நடக்கவும் நல்லாட்சியை உருவாக்க இறைவனிடத்தில் பிரார்த்திக்க வேண்டும்.

இந்த தேர்தலில் சிறுபான்மை சமூகத்தின் வாக்கும் தேவை .இதில் தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் வாக்குப் பலமும் தேவை .இதனை உணர்ந்து கொண்டு நல்லாட்சியை உருவாக்குவோம். எமது நிலைப்பாடு ஒருமித்த ஆதரவுடன் இருக்க வேண்டும்.

இதில் திருகோணமலை மாவட்டம் ஜனாதிபதி தேர்தலில் பாரிய பங்கு வகிக்கிறது.

கடந்த கால தேர்தலின் படி ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு எமது மாவட்ட மக்கள் அளப்பரிய பங்கினை வகித்துள்ளார்கள். இதனை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது .

மனிதனாக நின்று கொண்டு நல்லாட்சி அரசாங்கத்தை பாதுகாத்த ஒரு தலைமை என்றால் அது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் அவர்களே, இவர் மீது வீண்பழி சுமத்துவதற்காக அண்மைக்கால இனவாதிகள் எத்தனையோ குற்றச்சாட்டுகளையும் விசாரணைகளையும் நடத்தியுள்ளார்கள்.

இனவாத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டை சுதந்திர தேசமாக மாற்றுவதற்கு சிறுபான்மை சமூகத்தின் பலம் தேவையாகும் என்றார்.

திருமலை மாவட்ட விசேட நிருபர்

Tue, 10/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை