கார் விபத்து; இருவர் பலத்த காயம்

கார் விபத்து; இருவர் பலத்த காயம்-Car Accident-2 Injured-Palmerston Estate-Nanuoya

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாமஸ்டன் பிரதேசத்தில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இன்று (05) மாலை நுவரெலியா பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கிச் சென்ற குறித்த கார், ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் பாமஸ்டன் பிரதேசத்தில் பிரதான வீதியை விட்டு விலகி மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

கார் விபத்து; இருவர் பலத்த காயம்-Car Accident-2 Injured-Palmerston Estate-Nanuoya

குறித்த காரில் இருவர் பயணித்துள்ளதோடு, குறித்த இருவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிஷாந்தன்)

Sat, 10/05/2019 - 20:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை