மலையக இளைஞர்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய வேண்டும்

அமைச்சர் இராதாகிருஸ்ணன்

மலையக இளைஞர்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய ஜனாதிபதி ஒருவரை நாம் தெரிவு செய்ய வேண்டும். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் இளைஞர் மறுமலர்ச்சி செயற்திட்டத்திலும் அவர்களை இணைந்துக் கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விசேட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

மலையகத்தில் தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை மாத்திரம் காணப்படவில்லை. எல்லோரும் சம்பள பிரச்சினையை மட்டும் நினைக்கின்றனர். அதனையும் தாண்டி பல பிரச்சினைகள் இருக்கின்றன. அதற்கு முற்றுபுள்ளி வைக்க ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதனையே நாங்கள் செய்து வருகின்றோம். மலையகத்தில் இளைஞர்களுக்கு பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்புகள் இல்லை. சுயதொழில் வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன. தொழில்சார் கற்கை நெறிகளை கற்க கூடிய வாய்ப்புகளும் குறைவாக இருக்கின்றது. பொழுது போக்கு அம்சங்கள் குறைவு இவ்வாறான நிலையில் இளைஞர்கள் பல தீய பழக்கவழக்களுக்கு உள்ளாகின்றனர். இந்நிலை மலையகத்தில் உருவாகக் கூடாது. இதனை தீர்க்க தேசிய மட்டத்தில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க வேண்டும். அந்த வகையில் இதற்கு ஏற்றால் போல் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச “இளைஞர் மறுமலர்ச்சி” வேலைத்திட்டம் ஒன்றினை முன் வைத்துள்ளார். அதனை ஆதரிக்க வேண்டும். இந்த திட்டம் இளைஞர்களின் பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் திட்டமாக காணப்படுகின்றது. இதனை மலையகத்திலும் முன்னெடுத்துச் செல்ல முடியும். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தேர்தலில் வெற்றி பெற வேண்டும். ஆகையால் மலையக இளைஞர்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். தற்போது மலையகத்தில் இளைஞர்களின் வாக்கு விகிதம் அதிகரித்து உள்ளது. இவர்கள் தீர்மானிக்கும் சக்தியாகவும் உள்ளனர்.

அதனால் உங்கள் வாக்குகளை உங்களுக்கு சேவை செய்ய கூடிய ஒருவருக்கு அளிக்க வேண்டும். அந்த வகையில் இதற்கு பொருத்தமானவர் சஜித் பிரேமதாச வே ஆகையால் இவரை வெற்றி பெறச் செய்ய அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Thu, 10/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை