இலங்கையரொருவர் ஒலிம்பிக் போட்டிக்கு வருவதைக்கான ஆசை

மெய்வல்லுநர் பயிற்றுவிப்பாளர் டொனி கெம்பல்

இலங்கை வீரரொருவரோ, வீராங்கனையோ 19 வருடங்களுக்குப் பின்னர் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் பங்குபற்றுவதை காண்பதே தனது பிரார்த்தனை என இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்க திறமைவாய்ந்த தடகள போட்டி பயிற்றுவிப்பாளர் டொனி கெம்பல் தேசிய ஒலிம்பிக் குழுவின் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.

சிட்னி நகரில் 2000ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் 200 மீற்றர் (பெண்கள்) ஓட்டப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இலங்கை ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்கவின் பிரத்தியேக பயிற்சியாளராக செயற்பட்டதன் மூலம் டோனி கெம்பல் இலங்கையரின் கவனத்தை ஈர்த்தவர்.

உலகப் புகழ் பெற்ற ஒலிம்பிக் மற்றும் உலக வெற்றியாளர்களான தடகள வீர. வீராங்கனைகளுக்கான மைக்கல் ஜோன்சன், மொரிஸ் கிறிஸ், ஏட்ஸ் ஹெரிங், டானியா லோரன்ஸ், டெரன் ரொப்லஸ், எலன் ஜோன்சன், பெலிக்ஸ் சென்செஸ், செல்வின் ஸ்மித், டெனிஸ் மிடெல் மற்றும் 60 மீற்றர் (ஆண்கள்) உள்ளக உலக சாதனையாளர் புரூனி சூரின் மற்றும் உயரம் பாய்தல் (ஆண்கள்) அமெரிக்க சாதனைக்கு சொந்தக்காரரான ஹொலிஸ் கொன்வேகெயின் பிரத்தியேக பயிற்சியாளரும் டோனி கெம்பல் ஆவார்.

கட்டாரில் நடந்து முடிந்த உலக தடகள போட்டியினை காண வந்திருந்த கெம்பல் தேசிய ஒலிம்பிக் குழுவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு இரண்டுநாள் விஜயமொன்றை மேற்கொண்டு இங்கு வருகை தந்தார்.

8, 9ம் திகதிகளில் இங்கு தங்கிய அவர் சுகததாச, தியகம, டொரிங்கடன் ஆகிய தடகள மைதானங்களை பார்வையிட்டார். தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் செயலாளர் மெக்ஸ்வல்த சில்வா நேற்று முன்தினம் ஊடக சந்திப்பின்போது இலங்கை தடகள விளையாட்டு சங்கத்தையும் இணைந்து எதிர்வரும் காலங்களில் டோனி கெம்பலை நீண்ட கால மற்றும் குறுகிய கால பயிற்றுவிப்பாளராக இணைந்து கொள்ள அக்கறை கொண்டுள்ளதாகக் கூறினார்.

இம்முறை இலங்கைக்கான சுற்றுலாவுக்கு அவருக்கு அழைப்பு விடுத்த வேளையில் தேசிய ஒலிம்பிக் கமிட்டி உயர் திறன் மதிப்பீட்டாளர்களும் பணிப்பாளருமான சுசந்திகா ஜயசிங்க தொடர்பாடல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ம் திகதி இலங்கை மன்றக் கல்லூரியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற சுசந்திகா ஜயசிங்கவின் சுயசரிதை வெளியீட்டு விழாவுக்கு விசேட விருந்தினராகக் கலந்து கொண்டார்.

நேற்று முன்தினம் பூராவும் கெம்பல் தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் ஹேமசிறி பெர்னாந்து கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இரண்டு பயிற்சிப்பட்டறைகளில் கலந்துகொண்டார். நேற்று முன்தினம் பகல் நடைபெற்ற பயிற்சி பட்டறைகளில் 350க்கும் அதிகமான பயிற்சியாளர்களும் மற்றும் விளையாட்டு கழக பிரதிநிதிகளும் கலந்துகொண்டார்கள். அங்கு உரையாற்றிய அவர் 19 வருடங்களுககுப் பிறகு வீரரொருவரோ வீராங்கனையோ ஒலிம்பிக்கில் பதக்கமொன்றை வெற்றி கொள்வதற்கு முன்னர் இறுதிப் போட்டிக்கு வருவதைக் காண நான் ஆசைப்படுகின்றேன்.

இந்நாட்டு வீர, வீராங்ககைளுக்கும் பயிற்சியாளர்களுக்கும் அர்ப்பணிப்பு அவசியம். ஒழுக்கம், கல்வி இரண்டும் விளையாட்டு வீரரின் வெற்றிக்கு உறுதுணையாகும். அதேபோல் அவர்களின் உணவு பழக்கங்களும் அவர்களின் திறமைக்கு அவசியமாகும். முடிந்தளவு பிரபலமான உணவுகள் பானங்களை அருந்தும் பழக்கத்திலிருந்து விடுபடவெண்டும். நித்திரையை முக்கியமாக ஒன்றாக கருதுங்கள். விரும்பியவாறு மருந்துகளை எடுப்பதை தவிருங்கள். சர்வதேச விளையாட்டு கழகம் பரிந்துரைத்துள்ள மருந்துகள் மற்றும் பலமூட்டும் பான வகைகளை பாவிக்க வேண்டும். இணையத்தளத்தில் விளையாட்டு வீரர்களுக்கு அனுமதிக்கப்பட்டதென குறிப்பிடப்படும் அநேகமான மருந்து வகைகள் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து மூலக்கூறுகளை கொண்டுள்ளதால் அதனை அனுமதிக்குரிய டொக்டர்களை கொண்டே தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.

பயிற்சியாளர்கள் இன்று பெரியளவில் பயிற்சியாளர்களாக இருப்பது கவலையை அளிக்கிறது. விளையாட்டு வீரர்கள் பயிற்சியாளர்களால் மேற்பார்வை செய்யப்பட வேண்டும். அதேபோல் பயிற்சியாளர்களும் கண் காணிக்கப்பட வேண்டும். இளைஞர்களான விளையாட்டு வீர, வீராங்களைகளுக்கு பயிற்சி அளிப்பவர்கள் வெளிநாட்டில் விசேட பயிற்சியைப் பெற்றிருக்க வேண்டும். அதேபோல் விளையாட்டு வீர, வீராங்கனைகள் தங்களுடைய மொழிக்கு மேலதிகமாக வேறொரு மொழியையும் கற்றிருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் வெளிநாடுகளில் பயிற்சியை பெறமுடியாது. இவ்வாறான விடயங்களில் அக்கறை செலுத்துவதன் மூலம் அலங்கைக்கு 19 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒலிம்பிக் பதக்கம் குறித்த நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளலாம்.

Fri, 10/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை