ஆண்டார்டிக்காவில் பாரிய பனிப்பாறை உடைந்தது

அண்டார்டிக்காவில் உள்ள அமெரி பனியடுக்குப் பாறையில் இருந்து 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று விலகிச் சென்றுள்ளது.

புதிதாக உருவாகி இருக்கும் இந்தப் பனிப்பாறை 1,636 சதுர கிலோமீற்றர் பரப்பளவு கொண்டதாகும். இத்தனை பெரிய பனிப்பாறையால் எதிர்காலத்தில் கப்பல் போக்குவரத்துக்கு ஆபத்து ஏற்படும் என்றும் எனவே அது கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 1960களில் அமெரி பனியடுக்குப் பாறையில் இருந்து 9,000 சதுர கி.மீ. அளவு பனிப்பாறை ஒன்று விலகிச் சென்றது.

விஞ்ஞானிகளுக்கு இம்மாதிரியான நிகழ்வு நடைபெறும் என்று தெரிந்திருந்தது. ஆனால் அவர்கள் தற்போது பிரிந்துள்ள பனிப் பாறைக்கு சற்று தள்ளி கிழக்கு திசையில் கண்காணித்து வந்தனர். “பருவநிலை மாற்றத்துக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. கோடைக்காலத்தில் பனிப்பாறைகள் அதிகப்படியாக உருகி வந்தாலும், அமெரி பாறை சமநிலையுடன்தான் உள்ளது” என்று பெருங்கடல் சார்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்றின் ஆய்வாளர் பிரிக்கர் தெரிவித்துள்ளார்.

Wed, 10/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை