ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான மூன்று கஜ முத்துக்களுடன் இருவர் கைது

ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று கஜமுத்துக்களுடன் (Elephant Pearl) இரண்டு பேர் நேற்று சாய்ந்தமருது பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலின் முன்னால் பொதி ஒன்றுடன் இருவர் சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து

மாறுவேடமணிந்து சென்ற குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார், இச்சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர். அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த அலிப்தம்பி முஹமட் ஹஸ்னி (வயது-30) மீரா முகைதீன் முகமட் சலீம் (வயது-39) ஆகியோரே மூன்று கஜ முத்துக்களுடன் கைதாகியுள்ளனர்.

இச்சுற்றிவளைப்பில், கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார, கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த ஆகியோரின் வழிகாட்டலில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் வை.அருணன் சார்ஜன்ட் ஏ.எல்.எம் றவூப் (63188), கொன்ஸ்டபிள்களான நவாஸ்(44403), கீர்த்தனன்(6873), அமலதாஸ்(73593) ஆகியோர் பங்கேற்றிருந்தனர். மீட்கப்பட் கஜமுத்துக்கள் ரூபா 1 கோடியே 50 இலட்சம் பெறுமதியானது என்றும் அம்பாறை மாவட்டத்தில் முதல் முதலாக கைப்பற்றப்பட்ட கஜமுத்துக்கள் இவையாகும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

பெரியநீலாவணை, கல்முனை விசேட நிருபர்கள்

Thu, 10/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை