அக்கரைப்பற்று பொது மையவாடியில் விசேட வேலைத் திட்டம்

அக்கரைப்பற்று பொது மையவாடியில் மழை காலங்களில் தேங்குகின்ற நீரை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநகர சபை, மக்கள் பங்களிப்புடனான விஷேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளது.

இவ்வேலைத் திட்டதினை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு மாநகர சபை முதல்வர் அதாஉல்லா அஹமட் சக்கி தலைமையில் இடம்பெற்றது.

மழை காலங்களில் மையவாடியில் நீர் வடிந்து செல்ல முடியாமல் உள்ளதோடு, வெள்ள நீர் உட்புகுவதன் மூலமாகவும் மழை காலங்களில் குழிகள் வெட்ட முடியாத நிலை ஏற்படுகின்றது.

அக்கரைப்பற்று மாநகர சபையினால் இம்மையவாடி சுமார் ஐந்து மில்லியன் ரூபா மூலம் புனரமைக்கப்படுவதற்கான மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதியில் 1.5 மில்லியன் ரூபா அக்கரைப்பற்று மாநகர சபை மூலம் வழங்கி வைக்கப்படவுள்ளது.

இவ்வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வின்போது மாநகர சபை மக்கள் பிரதிநிதிகள், மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி, ஜம்இயதுல் உலமாக சபை இணைச் செயலாளர் அஷ்-ஷேய்க் எஸ்.அப்துல் ஹாதி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்

Thu, 10/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை