ஓமானில் திறந்த மேசைப்பந்து போட்டி தொடர்: இலங்கை அணியும் பங்கேற்பு

ஓமானில் இம்மாதம் 24ம் திகதியிலிருந்து 28ம் திகதி வரையில் சர்வதேச மேசைப் பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள உலக ஜூனியர் சர்கியுட், ஓமான் ஜூனியர்மற்றும் கெடட் அணிகளுக்கிடையிலான திறந்த மேசைப் பந்து சம்பியன்சிப் 2019 சுற்றுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீலங்கா ஹோப்ஸ், ஜூனியர் மற்றும் கெடட் மேசைப் பந்து அணிகள் இம்மாதம் 23ம் திகதி ஓமானுக்குப் புறப்பட்டுச் சென்றது. இந்தப் போட்டிகள் மஸ்கட், போவ்ஷார் சுல்தான் கபூஸ் விளையாட்டு வளாகத்தில் 17 நாடுகளின் பங்குபற்றலுடன் இடம்பெறுகின்றது.

முன்னாள் தேசிய விளையாட்டு வீரர் புத்தசிரி விதானாச்சி அணி முகாமையாளராகவும், பயிற்றுவிப்பாளராகவும் செயற்படுவதோடு, செல்வி சிரியலதா பெண்களுக்கான அணியின் பொறுப்பாளராகச் செயற்படுகின்றார்.

இலங்கை அணியினால் உலக ஜாம்பவான்களுடன் சமமாகப் போட்டியிடக் கூடிய ஆற்றலும், திறமையும், அனுபவங்களும் இலங்கை அணிக்கு இருப்பதாக அணி முகாமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கிங்ஸ்வூட் சந்துப்ப அழககோன் மற்றும் கண்டி மஹாமாயா தனுஷி ரொட்ரிகோ ஆகியோர் இலங்கை ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்குத் தலைமை தாங்குகின்றனர்.

இலங்கை அணியில் தேசிய விளையாட்டு வீரரான செனுர, நான்கு ஜூனியர்கள் மற்றும் கெடட் இலங்கை கெப்ஸ் சந்துப்பா, தனுஷி, தேவ்மித், திசாஸ் ஆகியோர் உள்ளடங்குகின்றனர். அதேநேரம் 12 வயதின் கீழ் அணியில் ஒரு இலங்கை கெப்ஸ் தேவ்மித் மற்றும் ஒன்பது புதியவர்களுடன் பலமிக்க நிலையில் உள்ளது.

18 வயதின் கீழ் மற்றும் 15 வயதின் கீழ் அணி, 18 வயதின் கீழ், 15 வயதின் கீழ் மற்றும் 12 வயதின் கீழ் ஒற்றையர் போட்டிகள் இந்த ஐந்து நாட்களாக இடம்பெறும் சுற்றுப் போட்டியில் இடம்பெறவுள்ளது. இந்தச் சுற்றுப் போட்டியின் ஒவ்வொரு பிரிவிலும் பிரதான போட்டிக்குச் செல்வதற்காக இலங்கை அணியினர் உலக ஜாம்பவான்களுடன் முகங்கொடுக்க வேண்டியுள்ளது.

ஆரம்பத்திலிருந்து இந்த அணிக்குப் பின்னாலிருந்த மேசைப் பந்து இடைக்காலக் குழுவின் தலைவர் சஜித் ஜயலால், இந்த சம்பியன்ஷிப் போட்டிகள் இளம் துடுப்பாட்டக்காரர்களுக்கு சர்வதேச மேசைப் பந்தாட்டச் சம்மேளனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய தரவரிசை முறையின் உலக தரவரிசையில் கால் பதிப்பதற்கு மிகவும் தேவையான வெளிப்பாடுகளை வழங்கும் எனத் தெரிவித்தார்.

18 வயதின் கீழ் ஆண்கள்

1. சந்துபா அழககோன்

(கெப்டன்) - கிங்ஸ்வூட்

கல்லூரி, கண்டி.

2. தெவ்மித் வீரசேனா

லைசியம் சர்வதேச பாடசாலை,

நுகேகொடை.

3. திசாஸ் ரஞ்சகொட

றோயல் கல்லூரி, கொழும்பு.

18 வயதின் கீழ் பெண்கள்

1. தனுஷி ரொட்ரிகோ

(கெப்டன்) மஹாமாயா மகளிர்

கல்லூரி, கண்டி

2. மனீஷா சாலின்தி

கரந்தெனிய மத்திய கல்லூரி,

கரந்தெனிய

15 வயதின் கீழ் கெடட் ஆண்கள்

1. செனுர சில்வா

ஆனந்தா கல்லூரி, கொழும்பு

2. தனுஸ்க விஜேசிங்க

கிங்ஸ்வூட் கல்லூரி, கண்டி

3. விஹன்டு ரந்தின

தர்மாசோக கல்லூரி,

அம்பலங்கொடை

4. ஆதிப் றுஸ்தி

றோயல் கல்லூரி, கொழும்பு

5. மஹித் ஜயசுமான

லைசியம் சர்வதேச பாடசாலை,

கம்பஹா

6. வினுகா குணவர்தன

றோயல் கல்லூரி, கொழும்பு

15 வயதின் கீழ் கெடட் பெண்கள்

1. மின்னா ஹாசிம்

மகளிர் கல்லூரி, கொழும்பு

12 வயதின் கீழ் ஹோப்ஸ் ஆண்கள்

1. தெவ்மித் வீரசேனா

லைசியம் சர்வதேச பாடசாலை,

நுகோகொடை

2. கெக்குரு ஹேனநாயக்கா

ஆனந்தா கல்லூரி, கொழும்பு

3. தனூக் லமாசூரிய

ஆனந்தா கல்லூரி, கொழும்பு

12 வயதின் கீழ் ஹோப் பெண்கள்

1. தமாடி காவிந்தியா

ஸ்ரீதேவானந்தா கல்லூரி,

அம்பலாங்கொடை

அணி முகாமையாளர் /

பயிற்றுவிப்பாளர்

1. புத்தசிரி விதானாச்சி

புத்தளம் விஷேட நிருபர்

Sat, 10/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை