ஜப்பானில் ‘பேஜர்’ யுகம் முடிந்தது

ஜப்பானின் ஒரே ‘பேஜர்’ வழங்குநர் தமது சேவையை நேற்று முடிவுக்கு கொண்டுவந்தனர். அரை நுற்றாண்டுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சாதனம் கைத்தொலைபேசியின் வருகைக்குப் பின் தேவையற்ற ஒன்றாக மாறியது.

டோக்கியோ டெலிமெசேஜ் இங்க் தனது ரேடியோ சமிக்ஞையை திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிறுத்தியதாக அறிவித்துள்ளது.

அண்மைக்காலத்தில் இந்த சாதனம் கைபேசி பயன்படுத்த முடியாத மருத்துவ பணிகளுக்கு பயன்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

1968 இல் நிப்போன் டெலிகிராப் மற்றும் டெலிபோன் கோர்ப் நிறுவனங்களால் பேஜர் சோவை முதல் முறை ஆரம்பிக்கப்பட்டது. அலுவலகத்தில் இருந்து வெளியே உள்ள விற்பனை ஊழியர்களுடன் தொடர்பாடலை பேணுவதற்கு ஆரம்பத்தில் இந்த சாதனம் அதிகம் பயன்படுத்தப்பட்டது.

1980களில் பேஜரின் புகழ் அதிகரித்தது. 1996இல் பேஜர் பயனர்களின் எண்ணிக்கை 10 மில்லியனை எட்டியிருந்தது. எனினும் கைத்தொலைபேசி அறிமுகமானபின் பேஜரின் பயன்பாடு குறைந்தது.

Wed, 10/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை