ஓட்டமாவடி தாறுல் உலூம் வித்தியாலயம் கோட்டத்தில் முதலாமிடம்

ஓட்டமாவடி கோட்டத்திற்குட்பட்ட ஓட்டமாவடி தாறுல் உலூம் வித்தியாலயம் அண்மையில் நடைபெற்று முடிந்த கோட்டமட்ட விளையாட்டு போட்டிகளின் முடிவுகளின்படி கோட்டமட்டத்தில் முதலாமிடம் பெற்றுள்ளதாக கோட்டத்தின் விளையாட்டு இணைப்பாளர் எஸ்.எல்.எச்.இனாமுல்லாஹ் தெரிவித்துள்ளார்.

போட்டியில் பங்குபற்றிய தரம்–3 பெண்கள் அணியும், தரம்–-4 மற்றும் தரம்–-5 ஆண்கள் அணியும் முதலாமிடங்களைப் பெற்று வலயமட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

22பாடசாலைகள் பங்குபற்றிய இந்த போட்டி நிகழ்ச்சியில் ஓட்டமாவடி தாறுல் உலூம் வித்தியாலயம் முதலாமிடத்தை பெற்றிருப்பதாக அதிபர் மொஹமட் பைசல் தெரிவித்ததோடு ஊக்கப்படுத்திய ஆசிரியர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

Wed, 10/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை