வாழைச்சேனை கடதாசி ஆலையை மீள இயக்க முன்னைய அரசு முன்வரவில்லை

மங்கள செனரெத்

வாழைச்சேனைக் கடதாசி ஆலையை மீள இயங்கச் செய்வதற்கு முன்னைய அரசாங்கம் முன்வரவில்லை என வாழைச்சேனை கடதாசி ஆலையின் முன்னாள் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட ஐ.தே.க அமைப்பாளருமான மங்கள செனரெத் தெரிவித்துள்ளதார்.

நேற்று (14) தும்பங்கேணியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வாழைச்சேசை கடதாசி தொழிற்சாலை கட்டியெழுப்பக்கூடிய தொழிற்சாலையாக இருந்தும் அதனை அவர்கள் ஏன் மூடி வைத்துள்ளார்கள் என்பதைப் பற்றிச் சிந்தித்தேன்.

நான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரிடத்தில் சென்று இந்த தொழிற்சாலையை மீண்டும் இயங்கச் செய்வது பற்றிக் கதைத்தேன் அது மீள இயங்கினால் 750 இங்கு மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்பதையும் தெரிவித்தேன். அதனை அவர்கள் செய்யவில்லை.

பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவர் அமைச்சர் ரவி கருணாநாயக்க என்னை அழைத்து கடதாசி ஆலையைத் திறப்பதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்து தருகின்றோம் அதனைப் முன்னின்று செயற்படுத்துமாறு என்னிடம் கூறினார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்னர் என்னை அழைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எனும் பதவியையும் தந்துள்ளார்கள். பட்டிருப்புத் தேர்தல் தொகுதியின் தேர்தல் முகாமையாளராக எஸ்.திருநாவுக்கரசு என்பவர் நியமிக்கப்படவுள்ளார்.

அவருடைய நியமனத்தின் பின்னர் இந்த தொகுதியிலுள்ள மக்கள் உங்களுடைய தேவைகள், பிரச்சினைகளை எழுதி அவரூடாக எனக்கு அனுப்பி வையுங்கள்.

எமது மாவட்டக் காரியாலயத்தில் ஒருபகுதியில் தமிழ் மக்களுக்காகவும், இன்னுமொரு பகுதியில் முஸ்லிம் மக்களுக்காகவும், மற்றுமொரு பகுதியில் சிங்கள மக்களுக்காகவும் எமது உத்தியோகஸ்தர்கள் கடமையில் ஈடுபடுவார்கள்.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் பல்வேறுபட்ட கட்சிகளிலிருந்தும், நாளுக்கு நாள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து வருகின்றார்கள் என அவர் தெரிவித்தார்.

(பெரியபோரதீவு தினகரன் நிருபர்)

Tue, 10/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை