Header Ads

பொதுஜன பெரமுனவுடனான கூட்டணி தொடர்பில் சு. க இன்று இறுதி முடிவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வுடன் இணைவதா? இல்லையா? என்பது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது.

நேற்றுமுன்தினம் சு.கவின் மத்திய செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவையே கட்சி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அறிவிக்க இருப்பதாக சு.க தெரிவித்துள்ளது.

சு.கவின் மத்திய குழுக் கூட்டம் நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,கோட்டாபய ராஜபக்‌ஷ, பெசில் ராஜபக்‌ஷ, தயாசிரி ஜயசேகர ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை , சுமார் இரண்டு மணிநேரம்

நீடித்த சு.க மத்திய குழு கூட்டத்தில் பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியை அமைப்பதற்கு பெரும்பாளான உறுப்பினர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக அறிய வருகிறது. ஜனாதிபதித் தேர்தலில் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடவும், பாராளுமன்றத் தேர்தலில் பொதுச் சின்னத்தில் போட்டியிடவும் இதன்போது இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. என்றாலும், இறுதி முடிவை எடுக்க அதிகாரம் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுன் முடிவு நேற்று அறிவிக்கப்படும் என சு.க பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க கூறியிருந்தாலும் அது இன்று வரை பின்போடப்பட்டுள்ளது. பொது ஜன பெரமுனவுடன் இணைய உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் புதன் கிழமை இரு கட்சிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் எனவும் பொது ஜன பெரமுன முக்கியஸ்தர் ஒருவர் கூறினார்.

Mon, 10/07/2019 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.