மூன்றில் ஒரு பிள்ளைக்கு பருமன் அல்லது ஊட்டச்சத்து குறைபாடு

உலகில் உள்ள 700 மில்லியன் பிள்ளைகளில் மூன்றில் ஒரு பிள்ளை ஊட்டச்சத்துக்குறைவு அல்லது உடற்பருமனால் பாதிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நலன் அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.

1990க்கும் 2015க்கும் இடைப்பட்ட காலத்தில் உலகளவில் வறுமை சுமார் 40 வீதம் குறைந்துள்ளது. இருப்பினும் 4 வயதிற்குக் கீழ் உள்ள பிள்ளைகளில் சுமார் 149 மில்லியன் பிள்ளைகள் வயதிற்குத் தகுந்த வளர்ச்சியடையவில்லை என்று கூறப்பட்டது. இதனால் அவர்களின் மூளை, உடல் வளர்ச்சி பாதிக்கப்படலாம்.

ஊட்டச்சத்து இல்லாத உணவை உட்கொள்வதால் ஏற்படும் உடற்பருமன் பிள்ளைகளிடையே அதிகரித்து வருவதாகவும் அமைப்பு கூறியது.

உலகளவில் சுமார் 800 மில்லியன் மக்கள் பசியால் அவதிப்படுவதாகவும், சுமார் 2 பில்லியன் மக்கள் சாப்பிடக்கூடாத உணவை அதிக அளவில் உட்கொள்வதாகவும் சிறார் நலன் அமைப்பு தெரிவித்தது.

Wed, 10/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை