வல்லுநர்களை ஆலோசித்தே கோட்டாவின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனமானது அவசரத்தில் உருவாக்கப்பட்ட கொள்கை அறிக்கை அல்ல. வல்லுநர்கள் மற்றும் தொழில் சார்பானவர்களுடன் கவனமாக ஆலோசிக்கப்பட்டே விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் மாநாடு நேற்று ராஜகிரியவில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரால் முன்வைக்கப்பட்ட மிகச் சிறந்த கொள்கை அறிக்கை கேட்டாவினால் முன்வைக்கப்பட்ட கொள்கை அறிக்கையே ஆகும் என்று அவர் மேலும் கூறினார்.

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் இன்னும் அவரது கொள்கை அறிக்கையை வெளியிடவில்லை.

இன்னும் சில நாட்களில் இடம் பெறும் தபால் வாக்களிப்புக்கு முன்னர் அது வெளியிடப்படலாம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டார்.

அதேவேளை கோட்டாபயவின் கொள்கை அறிக்கையில் தேசிய பாதுகாப்புக்கும், ஊழல் எதிர்ப்புக்கும் முன்னுரிமை கொடுக்கப்படவுள்ளதாக காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரன இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போது குறிப்பிட்டார். 

 

Tue, 10/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை