எந்த வேட்பாளருடனும் கோட்டாபய ஒப்பந்தம் செய்யவில்லை

ஹிஸ்புல்லாஹ் விவகாரம் தொடர்பில் நாமல் விளக்கம்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேறு எந்த வேட்பாளருடனும் எந்தவொரு இணக்கப்பாடு தொடர்பாகவும் ஒப்பந்தங்கள் எதனையும் செய்துகொள்ளவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற  உறுப்பினர் எஸ். பி. திசாநாயக்க கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை பற்றி விளக்கமளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஹிஸ்புல்லாவுடன் தான் பேசியுள்ளதாகவும், அதன்படி ஹிஸ்புல்லாவின் ஆதரவு அவருக்கே கிடைக்கும் என்று கடந்த வெள்ளிக்கிழமை எஸ். பி. திசாநாயக்க அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது டுவிட்டர் பதிவில் அவ்வாறான இணக்கப்பாடுகள் எதனையும் செய்துகொள்வது தேர்தல் சட்டத்தின் படி சட்ட விரோதமானவை என்று நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

 

Tue, 10/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை