ஏனைய ஜனாதிபதிகள் போன்று எனக்கு குற்றச்சாட்டு இல்லை

 எந்தவொரு குற்றச்சாட்டுகளும் அற்ற நபராக நவம்பர் மாதத்தில் அரசாங்கத்தின் பதவி காலத்தை நிறைவு செய்து வெளியேறவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்காது எனவும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். இந்த மாநாடு நேற்று முன்தினம் (05) மாலை எல்பிட்டிய மைதானத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் நவம்பர் மாதத்தில் எந்தவொரு குற்றச்சாட்டுகளும் அற்ற நபராக அரசாங்கத்தின் பதவிக் காலத்தை நிறைவு செய்து வெளியேறுவதாக கூறினார்.

ஊழல் அற்ற நிர்வாகத்தை முன்னெடுக்க தான் தீர்மானித்திருந்த போதிலும் அதற்காக பல போராட்டங்களை நடத்த வேண்டியேற்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜே.ஆர்.ஜெயவர்தன முதல் அனைத்து ஜனாதிபதிகளுக்கும் போராட்டங்களை முடக்க துப்பாக்கியை பயன்படுத்திய குற்றச்சாட்டு உள்ளது.அரசியல் பலிவாங்கல்களுக்காக படுகொலை செய்வதாகவும் பெண்களுக்கு எதிராக அநீதி இழைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால் எனக்கு அவ்வாறான குற்றச்சாட்டுகள் கிடையாது என்றார்.

 

Mon, 10/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை