தேர்தலில் போட்டியிடாத போதும் கோட்டாபயவை ஆதரிக்கவே மாட்டேன்

தேர்தலில் போட்டியிடாத போதும் தான் பொதுஜன பெரமுனவிற்கு ஒரு ​போதும் ஆதரவு வழங்கப் போவதில்லை என ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

சமல் ராஜபக்‌ஷ வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் தானும் வேட்புமனு தாக்கல் செய்யாதிருக்க இறுதி நேரத்தில் முடிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அவர்,

சுதந்திரக்கட்சியை பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாகவும் சுதந்திரக் கட்சி கோட்டாபயவுக்கு ஆதரவு வழங்குவதால் குறுங்கால இலாபமே கிடைக்கும் என்றும்  தெரிவித்தார்.

ஜனாதிபதித தேர்தலில் சுயாதீனமாக ​போட்டியிட்டு வெற்றிபெற முடியாது என்றும் அதனால் இம்முறை வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ராஜபக்ஷவினருக்கு மாத்திரம் போட்டியிட அனுமதி வழங்க முடியாது.

தினேஷ் குணவர்தன போன்ற ஒருவரை நிறுத்தியிருந்தால் பிரச்சினை கிடையாது என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக குமார வெல்கம சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

சுதந்திரக் கட்சி சார்பில் வேட்பாளர் களமிறங்காவிட்டால் தான் போட்டியிடுவதாக இவர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.எனினும் அவர் வேட்புமனு தாக்கல் செய்யாதது குறிப்பிடத்தக்கது.(பா)

 

Tue, 10/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை