இளம் ஜனாதிபதியை உருவாக்கி அபிவிருத்திப் புரட்சி ஏற்படுத்த சஜித்திற்கு வாக்களியுங்கள்

நாட்டை முன்னேற்றுவதற்கான புரட்சியை ஏற்படுத்த சஜித் பிரேமதாஸவிற்கு வாக்களிக்க அனைவரும் முன்வர வேண்டும் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

புறக்கோட்டை சுயதொழில் முயற்சியாளர்கள், வீதியோர வியாபாரிகள் ஆகியோருடனான சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது,

கொழும்பை அபிவிருத்தி செய்வதாகக் கூறி வீதியோர வியாபாரிகளை கோட்டாபய துரத்தினார். மீண்டும் அத்தகைய நிலை ஏற்படுவதை விரும்புகிறீர்களா?

2018 ஆகும் போது கடன் சுமையை மட்டுப்படுத்த இருந்த ​போதும் 52 நாள் நிகழ்ந்த ஆட்சி சதி, அதன்பின்னரான உயிர்த்தஞாயிறு தாக்குதல் என்பவற்றால் பல சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது.

சுயதொழில் முயற்சிகளுக்கு உதவி வழங்குவதற்குத் தனியான பிரிவொன்று உருவாக்க

இருக்கிறோம். 'வன்ஸ்டொப் சொப்' ஊடாக பணம் படைத்தவர்களுக்கு மாத்திரமன்றி சிறிய மனிதனுக்கும் வசதிகள் வழங்க இருக்கிறோம்.500 மில்லியன் டொலர் முதலிடும் நபருக்கு முதலீட்டு சபை ஊடாகவும் 5 இலட்சம் கொண்டுவரும் நபருக்கு நகர சபை ஊடாகவும் வசதிகள் அளிக்க வேண்டும்.

சிறிய அளவிலான வியாபாரங்களை மேம்படுத்த வழிவகைகள் மேற்கொள்ள வேண்டும்.நாட்டை முன்னேற்றுவதற்கு இறக்குமதிகளை விட ஏற்றுமதி அதிகரிக்கப்பட வேண்டும்.புதிய தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்யவும் கைத்தொழில் புரட்சி மேற்கொள்ளவும் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதும் முக்கியமாகும். நாட்டை முன்னேற்றுவதற்கான புரட்சியை சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிப்பதினூடாக ஏற்படுத்த வேண்டும்.இந்த திட்டங்களை அழிப்பதற்கு குண்டுதாரிகள் தேவையில்லை. அதற்காக மொட்டு சின்னத்திற்கு வாக்களித்து கோட்டாபயவிற்கு வாக்களித்தாலே போதுமானது. பெரும்பான்மை பலமின்றி நான்கரை வருடங்கள் நாட்டை முன்னேற்றினோம்.எமது ஜனாதிபதி, பெரும்பான்மை பலமுள்ள அரசு, எமது மாகாண சபை என்பன கிடைத்தால் ரொக்கட் ​வேகத்தில் நாட்டை முன்னேற்ற முடியும் என்றும் அவர் கூறினார்.

Wed, 10/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை