ஆண்ட்ரூ டை விலகல்

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரிலிருந்து அவுஸ்திரேலிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டை விலக்கப்பட்டுள்ளார்.

முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டி-20 தொடரிலிருந்து வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டை விலக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பயிற்சியின் போது தனது வலது முழங்கையில் காயம் ஏற்பட்டதால், மூன்று போட்டிகளில் இருந்து டை வெளியேற்றப்பட்டார் என்று தெரிவித்துள்ளது. டைவுக்கு பதிலாக ஒரு மாற்று வீரர் எதிர்வரும் நாட்களில் பெயரிடப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், பில்லி ஸ்டான்லேக் மற்றும் கேன் ரிச்சர்ட்சன் போன்ற வீரர்களுடன் வலுவாக உள்ள அவுஸ்திரேலிய அணி, இலங்கைக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mon, 10/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை