ரிட்ஸ்பரி கனிஷ்ட தேசிய ஸ்கொஷ் சம்பியன்ஷிப் வெற்றியாளர்களாக ட்ருவிங்கா, சமீர தெரிவு

இலங்கையின் முதல் தர சொக்‍கலட் தயாரிப்பான ரிட்ஸ்பரி, 30 ஆவது தேசிய கனிஷ்ட ஸ்கொஷ் சம்பியன்ஷிப் போட்டிளுக்கு அனுசரணை வழங்கியிருந்தது.

இலங்கை ஸ்கொஷ் அமைப்புடன் கைகோர்த்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 12ஆம் திகதி ஆரம்பமாகி கடந்த 16 ஆம் திகதி இரத்மலானை விமானப் படை ஸ்கொஷ் தொகுதியில் இடம்பெற்றது.

2019 ஆம் ஆண்டுக்கான, 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் வெற்றியாளராக சமீர டீன்தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன்,பெண்கள் பிரிவில் சம்பியன் பட்டத்தை ட்ருவிங்கா பெரேரா பெற்றுக் கொண்டார்.

இந்த சம்பியன்ஷிப் போட்டியில் கனிஷ்ட பிரிவில் (ஆண்கள்) வெற்றியாளராக டி.எச்.ரி. ரன்தெனியதெரிவு செய்யப்பட்டிருந்ததுடன், பெண்கள் பிரிவில் அனர்கி பெரேரா வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

400க்கும் அதிகமான ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த ஆண்டின் போட்டிகளில் பங்கேற்றனர். 30ஆவது ரிட்ஸ்பரி கனிஷ்ட தேசிய ஸ்கொஷ் சம்பியன்ஷிப் போட்டிகள் 9, 11, 13, 15, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்டதில் இடம்பெற்றன. ஆரம்பநிலை போட்டியாளர்களுக்கான போட்டிகள் 11, 15 மற்றும் 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் இடம்பெற்றன.

தேசிய மட்டத்தில் ஸ்கொஷ் போட்டியை ஊக்குவிப்பதில் நிறுவனம் காண்பிக்கும் அர்ப்பணிப்பை ரிட்ஸ்பரி மேலும் உறுதி செய்யும் வகையில், தொடர்ச்சியாக 12 வருட காலமாக சம்பியன்ஷிப் போட்டிகளுக்கு அனுசரணை வழங்கியிருந்தது.

சிபிஎல் ஃபுட்ஸ் இன்டர்நஷனல் பிரைவட் லிமிடெட் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் நிலுபுள் டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில்,'ஒரு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக ஸ்கொஷ் மையம் மற்றும் ரிட்ஸ்பரி ஆகியன ஒன்றிணைந்து நாடு முழுவதையும் சேர்ந்த வளர்ந்து வரும் ஸ்கொஷ் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன.

இந்த ஆண்டின் சம்பியன்ஷிப்களில் உயர் மட்ட நியமனங்களை வெளிப்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்கியிருந்த அனைவருக்கும் நான் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

எமது இந்த முயற்சிகளினூடாக, சர்வதேச மட்டத்தில் ஸ்கொஷ் வீரர்களை தரமுயர்த்துவதற்கு உதவியாக அமைந்திருக்கும் என்பதில் நான் உறுதியான நம்பிக்கையை கொண்டுள்ளேன்.' என்றார்.

 

பெறுபேறுகள்:

பெண்கள்

9 வயதுக்குட்பட்ட பிரிவின் வெற்றியாளர் டி.எல்.எஸ்.டி. லியனகே. - இரண்டாமிடம் - எஸ்.ஆர்.மென்டிஸ்

11 வயதுக்குட்பட்ட பிரிவின் வெற்றியாளர் - என்.ஆர். டயஸ். இரண்டாமிடம் - என்.எச். விக்ரமசிங்க

13 வயதுக்குட்பட்ட பிரிவின் வெற்றியாளர் - ஆர்.ஐ.வூட். இரண்டாமிடம் - ஏ.டி.சமரசிங்க

15 வயதுக்குட்பட்ட பிரிவின் வெற்றியாளர் - வி.எஸ்.சி. சினாலி. இரண்டாமிடம் - அனர்கி பெரேரா

17 வயதுக்குட்பட்ட பிரிவின் வெற்றியாளர் - வை. குருப்பு. இரண்டாமிடம் - அனர்கி பெரேரா

19 வயதுக்குட்பட்ட பிரிவின் வெற்றியாளர் - எஸ்.டீன். இரண்டாமிடம் - வி.எஸ்.சி. சினாலி

ஆண்கள்

9 வயதுக்குட்பட்ட பிரிவின் வெற்றியாளர் - எம். திசாநாயக்க. இரண்டாமிடம் - ஏ.ஜி.ஆர். கிரான்

11 வயதுக்குட்பட்ட பிரிவின் வெற்றியாளர் - எம்.பி.பி. நாணயக்கார. இரண்டாமிடம் - எஸ்.ஏ. டயஸ்

13 வயதுக்குட்பட்ட பிரிவின் வெற்றியாளர் - பி.பி.டி. நிலந்த. இரண்டாமிடம் - எச். கோரலகே

15 வயதுக்குட்பட்ட பிரிவின் வெற்றியாளர் - அகில அதபத்து. இரண்டாமிடம் - செனத் பெரேரா

17 வயதுக்குட்பட்ட பிரிவின் வெற்றியாளர் - எம்.ஐ.எஃவ். அஸ்மான். இரண்டாமிடம் - டி.ஏ.டி. ரன்தின

19 வயதுக்குட்பட்ட பிரிவின் வெற்றியாளர் - டி. பெரேரா. இரண்டாமிடம் - எம். வூட்

பெண்கள்

11 வயதுக்குட்பட்ட பிரிவின் வெற்றியாளர் - கே.எல்.என். சில்வா. இரண்டாமிடம் - எஸ்.பி. மொரிஸ்

15 வயதுக்குட்பட்ட பிரிவின் வெற்றியாளர் - எம்.ஐ. பஹாம். இரண்டாமிடம் - எம்.எம். நிலாம்

ஆண்கள்

11 வயதுக்குட்பட்ட பிரிவின் வெற்றியாளர் - என்.எஸ். செனெவிரட்ன. இரண்டாமிடம் - டி.டி. சல்காடோ

15 வயதுக்குட்பட்ட பிரிவின் வெற்றியாளர் - டபிள்யு. ஏ. டி. எஸ். விக்ரமசிங்க. இரண்டாமிடம் - வை.எம். அல்விட்டிகல

Wed, 10/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை