அரசியலை ஆயுதமாக்கிக்கொண்டே ரயில்வே ஊழியர்கள் தேவையற்ற போராட்டம்

எம்மால் எதுவும் செய்ய முடியாது

அரசியலை ஆயுதமாக்கிக்கொண்டு ரயில்வே ஊழியர்கள் மேற்கொள்ளும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு எதுவும் செய்யமுடியாது என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். ரயில்வே ஊழியர்களுக்கு போதியளவு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியும் மேலும் சம்பள உயர்வு கிடைக்கவுள்ள நிலையில் மொட்டுக் கட்சியின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றவே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார். நிதியமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் கூறுகையில், ரயில்வே வேலை நிறுத்தப் போராட்டம் அடிப்படையற்றது. இது அப்பாவி மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இது அவர்களது சொந்த விருப்பில் மேற்கொள்ளும் போராட்டமல்ல. அரசியல் கட்சியொன்றின் தூண்டுதலினால் மேற்கொள்ளப்படும் போராட்டம். அதற்கு எம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

சம்பளப் பிரச்சினை ஏற்கனவே தீர்க்கப்பட்ட விடயம். அதில் போராடுவதற்கு எதுவும் இல்லை. ஜனவரி முதலாம் திகதி அவர்களின் கோரிக்கைக்கு தீர்வு கிட்டும். ரயில்வே ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்காகவே முதலில் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அப்போது விசேடமான சம்பள உயர்வு அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதிலிருந்து தொடர்ந்து பல தடவைகள் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 10/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை