மருந்து வழங்குனர் இடமாற்றத்தை கண்டித்து மக்கள் போராட்டம்

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட உயிலங்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் கடமையாற்றிய மருந்து வழங்குனர் திடீர் என இடமாற்றம் செய்யப்பட்டமையினை கண்டித்து அப் பிரதேச மக்கள் நேற்று காலை கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிலங்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் பல கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வைத்திய தேவைகளுக்காக சென்று வருகின்றனர். குறித்த ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு இன்று வரை நிரந்தர வைத்தியர் இல்லை.

இந் நிலையில் குறித்த சுகாதார பராமரிப்பு நிலையத்தில் கடமையாற்றி வந்த மருந்து வழங்குனர் திடீர் என இடமாற்றம் பெற்றுள்ளார். பதில் கடமைக்கு ஒரு மருந்து வழங்குனர் நியமிக்கப்படாத நிலையில் இடமாற்றம் வழங்கப்பட்டமையினை கண்டித்து அப் பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக நிரந்தர வைத்தியர் ஒருவரையும், மருந்தாளர் ஒருவரையும் நியமிக்க கோரி குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த மக்கள் முருங்கன் வைத்தியசாலைக்கு 07 கிலோ மீற்றர் தூரமும், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு 14 கிலோ மீற்றர் தூரமும் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மன்னார் குறூப் நிருபர்

Tue, 10/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை