சு.க தீர்மானம் ஐ.தே.கவுக்கு அழுத்தமாக இருக்காது

பிரதான ஊடகங்கள் முன்னிலையில் இம்முறை பிரதான கட்சிகளின் வேட்பாளர்களான அமைச்சர் சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கிடையிலான கொள்கை ரீதியான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் அதற்காக கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பகிரங்க அழைப்பு விடுப்பதாகவும் அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். இந்த விவாதம் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளுக்கிணங்க சுயதீனமாக ஏற்பாடு செய்யப்படவேண்டுமென்றும் குறித்த விவாதம் தொடர்பில் வெகு விரைவில் திகதி தெரிவுசெய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொள்ளும் தீர்மானம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்தவிதத்திலும் அழுத்தமாக இருக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி உள்ளிட்ட அந்தக் கட்சியின் செயற்குழு அதுதொடர்பில் தீர்மானிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு வொக்ஷோல் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி தேர்தல் செற்பாட்டு அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் விளக்கமளித்த அவர், தாம் ஜனாதிபதியாகவுள்ள அரசாங்கத்தில் எந்தவொரு அரச வளங்களும் விற்கப்படாது என ஐ.தே.கவின் ஜனாதிபதி

வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள கூற்றை தற்போது சிலர் தமது விமர்சனங்களுக்காக எடுத்துக்கொண்டுள்ளனர்.

இந்த வெளிப்பாட்டினால் ஐ.தே.கட்சியின் பொருளாதார கொள்கை தொடர்பாக சில தரப்பினருக்கிருந்த அவநம்பிக்கை இல்லாதுபோயுள்ளது. எனினும் அதிலிருந்து ஒரு வசனத்தை எடுத்துக்கொண்டு சிலர் சேறு பூசி வருகின்றனர்.

அரச வளங்கள் விற்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு சிலரால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

கடந்த ஆட்சிக் காலங்களில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரின் காலத்தில் அவ்வாறு இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு அரச வளங்களை விற்பது தொடர்பான குற்றச்சாட்டுக்கு சரியான பதில் வழங்காததனாலேயே சில சந்தேகங்கள் எழுவதற்கு காரணமாகின.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இதுதொடர்பில் தெளிவான கூற்றை வெளியிட்டுள்ளார்.

கடதாசியைப் பார்த்துக்கொண்டு “ரெலிபுறண்டர்”இல் உரைகொடுப்பவர்கள் தொடர்பில் தெரிவித்த அவர்,

கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் 'ரெலிபுறண்டர்' இல்லாமல் பேசமுடியாது. இதனால் இலங்கையின் வரலாற்றில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் ஒருவர் தமது கொள்கை தொடர்பான விவாதத்தில் பங்கேற்காதிருப்பது இதனால்தான். அதற்கு சஜித் பிரேமதாச ஒருபோதும் பயப்படமாட்டார்.

பெப்ரல் அமைப்பு ஏற்பாடுசெய்திருந்த வேட்பாளர்களுக்கான இந்த விவாதத்தில் கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொள்ளவில்லை. அவருக்கென்று சொந்த கருத்துக்கள் இல்லாமல் வேறு எவரும் எழுதிக்கொடுப்பதை மாத்திரமே வெளியிடுவதை அவர் இதன் மூலம் காட்டியுள்ளார்.

சொந்தக் கருத்துக்கள் இல்லாவொருவருக்கு ஜனாதிபதியாக முடியாது. (ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 10/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை