அட்டாளைச்சேனையில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

அட்டாளைச்சேனை கால்நடை வைத்திய அதிகாரி காரியாலயத்தின் ஏற்பாட்டில், கால்நடை வைத்திய நடமாடும் சேவை கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

அட்டாளைச்சேனை அரச கால்நடை வைத்திய அதிகாரி ​ெடாக்டர். டஹானா ஹனீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நடமாடும் சேவையில், பிரதேசத்திலுள்ள கால்நடை சொந்தக்காரர்கள், கால்நடை பண்ணையாளர்கள் கலந்துகொண்டு நன்மையடைந்தனர்.

இதன்போது, பண்ணையாளர்களைப் பதிவு செய்தல், ஆடு, மாடுகளுக்கான செயற்கைமுறை சினைப்படுத்தல் மற்றும் அது தொடர்பில் ஆலோசனை வழங்குதல், மாடுகளுக்கு

காது அடையாளமிடல், கால் நடைகளுக்கான வைத்திய சேவையும், நோய்த்தடுப்பு சம்பந்தமான ஆலோசனை வழங்குதலும்,

மருந்து வழங்குதல், பண்ணையாளர்களுக்கான பயிற்சி போன்ற பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இந்நடமாடும் சேவையில், கால்நடைகளின் நோய்களுக்கேற்றவாறு, இலவசமாக மருந்துப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டதாக ​ெடாக்டர். டஹானா ஹனீஸ் தெரிவித்தார்.

பாலமுனை, ஒலுவில் பிரதேச கால்நடை சொந்தக்காரர்கள், கால்நடை பண்ணையாளர்கள் நன்மையடையும் தனியான நடமாடும் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

(அட்டாளைச்சேனை மத்திய நிருபர்)

Mon, 10/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை