ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவுக்கு தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர் ஆதரவு

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை உறுப்பினர் லயன் கலாநிதி நாகலிங்கம் தனேந்திரன் ஆதரவு வழங்கியுள்ளார்.

தேசிய மக்கள் இயக்கம் உள்ளிட்ட சிவில் அமைப்புக்களின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு தேர்தல் பிரச்ச்சாரத்திற்காக நேற்று சென்றிருந்தார்.

கொழும்பிலிருந்து ரயிலில் யாழ்ப்பாணத்திற்கு சென்ற மகேஷ் சேனாநாயக்கவுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த வரவேற்பில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ரெலோ கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகர சபை உறுப்பினர் நா.தனேந்திரன் முன்னாள் இராணுவ தளபதிக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

 

பருத்தித்துறை விசேட நிருபர்

Thu, 10/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை