சென்னை மாமல்லபுரத்தில் சீன ஜனாதிபதி மோடி சந்திப்பு

சென்னை மாமல்லபுரம் வருகை தந்த சீன ஜனாதிபதி ஜின்பிங்கை தமிழக பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையுடன் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். பிரதமர் மோடி, சீன ஜனாதிபதி ஜின்பிங் ஆகியோர் இன்றும் மாமல்லபுரத்தில் பல்வேறு பிரச்சினை சந்தித்து பேசுகின்றனர்.

2 நாட்கள் சுற்றுப்பயணமாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், இந்தியா வருகை தந்துள்ளார். தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சந்திப்பு நடைபெறுகிறது. இதற்காக நேற்று பிற்பகல் சென்னை வந்த சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கரகாட்டம், ஒயிலாட்டத்துடன் ஜி ஜின்பிங்குக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலுக்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சென்றார். சிறிது நேரம் ஓய்வெடுத்த சீன ஜனாதிபதி நேற்று மாலை 4 மணியளவில் காரில் சர்தார் பட்டேல் ரோடு, மத்திய கைலாஷ், பழைய மாமல்லபுரம் சாலை, சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரை சாலை வழியாக 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாமல்லபுரம் சென்றடைந்தார்.

சீன அதிபர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சாலையின் இருபுறமும் கலை நிகழ்ச்சிகள் மூலம் சீன ஜனாதிபதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. வழி நெடுகிலும் இரு நாட்டு கொடிகளை அசைத்து மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது

Sat, 10/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை