கொஹ்லியின் இரட்டை சதத்தால் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி

விராட் கொஹ்லியின் அபார இரட்டை சதத்தின் மூலம் தென்னாபிரிக்காவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 137 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் இந்தியா 2–0 என கைப்பற்றியது. புனேவில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான நேற்று இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதற்கு 326 ஓட்டங்கள் தேவைப்படும் நிலையில் பலோ ஓன் செய்த தென்னாபிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 189 ஓட்டங்களுக்கே சுருண்டது. பந்துவீச்சில் உமேஷ் யாதவ் மற்றும் ரவிந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முன்னதாக நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடி இந்திய அணி முதல் இன்னிங்ஸுக்காக 5 விக்கெட் இழப்புக்கு 601 ஓட்டங்களை பெற்றது. ஆரம்ப வீரர் மாயங்க் அகர்வால் 108 ஓட்டங்களை பெற்றதோடு மத்திய வரிசையில் வந்த கொஹ்லி டெஸ்ட் போட்டிகளில் தனது அதிகூடிய ஓட்டங்களை பெற்றார்.

336 பந்துகளுக்கு முகம்கொடுத்த கொஹ்லி 33 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 254 ஓட்டங்களை பெற்றார்.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி 275 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

Mon, 10/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை