தீயில் அகப்படாமல் மனைவி பிள்ளைகளை காப்பாற்றிய ராமராஜூக்கு நிதியுதவி

கண்டியில் இடம்பெற்ற தீ விபத்தில் உயிரை பணயம் வைத்து தனது மூன்று பிள்ளைகள் மற்றும் மனைவியைக் காப்பாற்றிய நாமநாதன் ராமராஜூக்கு ஜனாதிபதி நிதியுதவி வழங்கி கௌரவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இந்நிகழ்வு இடம் பெற்றது.கண்டியில் அடுக்குமாடித் தொடரில் வாழ்ந்த இவரின் வீடு அண்மையில் திடீரெனத் தீப்பற்றியது.

இந்த அபாயத்திலிருந்து 

மனைவி, பிள்ளைகளை தீயில் அகப்படாமல் காப்பாற்றும் பொருட்டு துணிச்சலுடன் செயலாற்றிய, நாமநாதன்ராமராஜ் மாடியிலிருந்தவாறு மனைவி, பிள்ளைகளை பாதுகாப்பாக வெளியே வீசியதுடன், தானும் கச்சிதமாகக் குதித்து உயிர் தப்பியிருந்தார்.

இவரின் துணிச்சலைப்பாராட்டும் பொருட்டே இவருக்கு இந்நிதியுதவி வழங்கப்பட்டது. ஆபரணங்களுக்கு தங்க முலாம் பூசும் தொழில் செய்யும் நாமநாதனின் இல்லம் தீக்கு இரையானதால் அவரது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.

இவரின் தொழிலுக்குத் தேவையான இயந்திரங்களைக் கொள்வனவு செய்தல் உள்ளிட்ட குடும்பத்தின் நலனுக்காக ஜனாதிபதி 10 இலட்சம் ரூபாவை அன்பளிப்புச் செய்தார்.

இதேவேளை நேற்று கொழும்பு பேராயரின் தொடர்பாடல் மையத்தின் ஊடகப் பிரிவின் நடவடிக்கைகளுக்காக வீடியோ கெமரா ஒன்றும் கையளிக்கப்பட்டது. பெறுமதிவாய்ந்த இவ்வீடியோ கெமராவை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன,பேராயரின் தொடர்பாடல் மையத்தின் பணிப்பாளர் ஜூட் கிரிசாந்த பெர்ணான்டோ அருட் தந்தையிடம் கையளித்தார்.

 

 

Wed, 10/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை